பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 20 படைக்கை: என்றவழி படையைப் பிடித்த ്ത ു , எடுத்த கை, ஏந்திய கை எனவும்; குழைக்காது என்றவழி குழையையுடைய காது, செறித்த காது, இட்ட காது, அணிந்த காது எனவும்; தாய்மூவர் என்ற ழித் தாயொடு கூடி மூவர், கூடிய மூவர் எனவும்; குதிரைத்தேர் என்ற வழிக் குதிரையாற் பூட்டப்பட்ட தேர், பூணப்பட்ட தேர், ஒட்டப் பட்ட தேர் எனவும்; கரும்பு வேலி என்ற வழிக் கரும்பிற்கு ஏமமாகிய வேலி, வலியாகிய வேலி எனவும்; வரையருவி என்றவழி வரையினின்றும் விழா நின்ற அருவி, ஒழுகா நின்ற அருவி எனவும்; பாண்டிய நாடு என்ற வழிப் பாண்டிய னது நாடு, உடைய நாடு, எறிந்த நாடு, கொண்டநாடு என வும்; குன்றக் கூகை என்றவழிக் குன்றத்துக்கண் வாழா நின்ற கூகை, இரா நின்ற கூகை எனவும் இவ்வாறு வருவன இவையெல்லாம் எடுத்தோதின் வரம்பில ஆதலின் எல்லாச் சொல்லும் உரிய எனப் புறநடை ஒதல் வேண்டிற்று. ’’ இவ்வாறு இச்சூத்திரத்திற்கு உரையாசிரியர் பலரும் கூறிய உரைகள் ஒன்றற்கொன்று தம்முள் தொடர்பில்லாதன போற் காணப்பட்டாலும் அவர்கள் தம் உரையகத்துக் காட் டிய உதாரணங்களையும் விளக்கங்களேயும் ஒப்பவைத்து நோக் குங்கால், வேற்றுமைத் தொகைச் சொற்களே விரித்துப் பொருள் கொள்ளுமிடத்து உருபேயன்றி அவ்வுருபின முடித் தற்கு இன்றியமையாதனவாய்ப் பல்லாற்ருனும் பொருள் தொடர் புடையவாய் வந்து இயையும் எல்லாச் சொல்லும் விரித்தற் குரியன” என்பதே இவ்வுரைகளின் பொதுக் கருத்தாக அமைந்து வேற்றுமைத் தொகைகளில் உருபும் பொருளும் உடன் தொக்க தொகையின் இயல்பினே விளக்கி நிற்றல் காணலாம். பெயர்ப் பொருளை வேறுபடுத்தும் வேற்றுமையுருபுகளேயும் அவற்றின் பொருள் வகைகளையும் விரித்துரைக்கும் இவ்வேற் றுமை யியலின் புறநடையாக அமைந்த இச்சூத்திரம், வேற் றுமைத் தொகையின் மறைந்து நின்ற பிற சொற்களே விரிக்கு மாறு கூறியதெனக் கொள்ளுதல் அத்துணைப் பொருத்த முடை யதாகத் தோன்றவில்லை. அன்றியும் வேற்றுமைத் தொகையை விரிக்குமாறு கூறுதல் ஆசிரியர் கருத்தாயின் வேற்றுமைத்