பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 தொகையை விரிக்குங்காலே எனப் பொருள் தெளிவுபடச் சூத்திரஞ் செய்திருப்பர். அங்ங்னமன்றி வேற்றுமைப் பொருளே விரிக்குங்காலே என ஆசிரியர் எடுத்துரைத்தலால் இச்சூத் திரம் இவ்வேற்றுமையியலில் ஐ முதலிய வேற்றுமைக்கு உரியனவாக அவற்றின் ஈற்றில் முறையே தொகுத்துரைக்கப் பட்ட வேற்றுமைப் பொருள் வகைகளைப் பற்றியதாகும் எனக் கருத வேண்டியுளது. எனவே மேற்கூறிய வேற்றுமைகளின் பொருள் வகையை விரித்துரைக்குங்கால், காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின் ? என்பன முதலாக ஒவ்வொரு வேற்றுமையின் ஈற்றில் தொகுத் துரைத்த பொருள்களேயன்றி, அத்தொகுதிகளினின்றும் பல வாருகப் பிரிந்து அப்பொருளொடு பொருந்தித் தோன்றும் எல்லாச் சொற்களும் கொள்ளுதற்குரியன என இச்சூத்திரத் திற்குப் பொருள் கொள்ளுதல் பொருத்தமுடையதாகத் தோன்று கின்றது. இதன்கண் ஈற்று நின்றியலும் தொகை என்றது காப்பின் ஒப்பின் என்பது முதலாகத் தொகுத்துரைக்கப்படும் வேற்றுமை பற்றிய பொருட் பகுதிகளே. இரண்டாம் வேற்றுமைக்குரிய பொருள் வகைக, சில் எடுத்துரைக்கப்பட்ட காத்தற் பொருட்கு உதாரணம் ஊரைக்காக்கும் என்பது . இப்பொருளில் ஊரைப் புரக்கும், ஊரைப் பேணும், ஊரை ஒம்பும் என, புரத்தல், பேணுதல் ஒம்புதல் எனப்பலவாருகத் தோன்றும் எல்லாச் சொல் லும் இவ்வேற்றுமையில் விரித்துரைக்கப்படும் இயைபுடைய வாதல் காண்க. வேற்றுமைப் பொருளே விரித்தல் பற்றிய இவ்விதி சுருக்க நூலாகிய நன்னூலில் இடம்பெறவில்லை. ஆயினும் வேற்றுமை யுருபுகளே முடிக்கும் சொன் முடிபு பற்றிய விதியினை, 318. எல்லே யின்னும் அதுவும் பெயர்கொளும் அல்ல வினேகொளும் நான் கே ழிருமையும் புல்லும் பெரும்பாலும் என்மனர் புலவர்.