பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 எனவரும் சூத்திரத்தில் எடுத்துரைப்பர் பவணந்தி முனிவர். 'எல்லைப் பொருண்மைக்கண் வரும் ஐந்தாம் வேற்றுமையுருபும் அது என்னும் ஆரும் வேற்றுமையுருபும் பெயரைக் கொண்டு முடிவன. இவ்விரண்டுமல்லாத ஏனே வேற்றுமைகள் வினே யையும் வினைக்குறிப்பையும் கொண்டு முடிவன. அவற்றுள் நான்காம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் வினையினேயேயன்றி வினை யொடு பொருந்தும் பெயரைக்கொண்டு முடியும், பெரும்பாலும்: என்பது இதன் பொருளாகும். பெரும்பாலும் என்ற தல்ை ஆருவது வினையும் வினைக்குறிப் புங்கொண்டும், அல்லன வினையும் வினைக்குறிப்பும் பற்றிய பெயர் கொண்டும் முடியவும் பெறுமெனக் கொள்க’ என்பர் மயிலேநாதர். கருவூரின் கிழக்கு, சாத்தனது கை என எல்லேப்பொருட் டாகிய இன்னுருபும் அது என்னும் ஆரும் வேற்றுமையுருபும் பெயர் கொண்டன. சாத்தன் வந்தான், சாத்தன் நல்லவன்; குடத்தை வனேந்தான், குடத்தையுடையன்; வாளால் வெட் டின்ை, வாளால் வலியன்; சாத்தனுக்குக் கொடுத்தான், சாத்தனுக்கு நல்லன்; நோயினிங்கின்ை, நோயிற்கொடியன், அவையின்கண் இருந்தான், அவையின்கட் பெரியன்; கொற்ரு கொள், கொற்ரு வலியை என அல்லன வினைகொண்டன. பிணிக்கு மருந்து, மனையின்கண் ஒளி என நான்காம் வேற்று மையும் ஏழாம் வேற்றுமையும் வினேயேயன்றிப் பெயர் கொண் டன. இப்பெயர்கள் பிணிக்குக் கொடுக்கு மருந்து, மணியின் கண் இருக்கும் ஒளி என வினைவேண்டி நிற்றலின் வினையொடு பொருந்தும் பெயர்களாயின என்பர் சிவஞானமுனிவர்.