பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 (இ.ஸ்) கருமமல்லாத சார்பு பெருண்மைக்கு ஏழாம் வேற் றுமை உரித்தாய் வருதலும் உடைத்து. எ-று. இரண்டாம் வேற்றுமைக்குச் சொல்லப்பட்ட காப்பின் ஒப்பின் எனவரும் பொருட்பகுதிகளுள் சார்பு பொருண்மையும் ஒன்ருகும். அது கருமச்சார்பும் கருமமல்லாச்சார்பும் என இரண்டு வகைப்படும். அவற்றுள் கருமச் சார்பாவது துணேச் சார்ந்தான் என்பது போல ஒன்றனேயொன்று மெய்யுற்றுச் சார்தலாகும். கருமமல்லாச் சார்பென்பது, அரசரைச் சார்ந் தான். என்ருற் போல ஒன்றையொன்று மெய்யுறுதலின்றி வருவதாகும். இவற்றுள் கருமமல்லாச் சார்பு பொருண்மை தனக்குரிய இரண்டாம் வேற்றுமைச் செயப்படு பொருளின் நீங்காது அரசர்கட் சார்ந்தான்? என ஏழாம் வேற்றுமைக் குரிய இடப் பொருளிலும் மயங்கினமை காணலாம். தூண் பற்ருக ஒருவன் சார்ந்தாற்போல அரசர் பற்றக ஒருவன் சார்ந் தொழுகுதலின் அது சார்பாயிற்று. அடு. சிஜனநிலேக் கிளவிக் கையுங் கண்ணும் - வினேநிலே யொக்கு மென்மனர் புலவர். இதுவும் அது. (இ-ள்) சினேமேல் நிற்குஞ் சொல்லிற்கு இரண்டாவதும் ஏழாவதும் வினேநிலைக்கண் ஒக்குமென்று சொல்லுவர் புலவர். எ-று . (உ-ம்) கோட்டைக் குறைத்தான், கோட்டின்கட் குறைத் தான் எனவரும். இதன் கண் இரண்டாம் வேற்றுமைக்குரியதாகச் சொல்லப்பட்ட குறைத்தற் பொருள் ஏழாம் வேற்றுமைக்கண் ணும் ஒத்த நிலேயிற் பயின்று வந்தமை காணலாம். வினேநிலையொக்கும் எனப் பொதுப்படக் கூறினராயினும், புகழ்தல் பழித்தல் என்னும் தொடக்கத்தனவொழித்து அறுத்தல், குறைத்தல் முதலாயின வினையே கொள்ளப்படும் என்பர் சேணுவரையர்.