பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 (இ ஸ்) முதலும் சினையும் முதலாயது முதலேயாய்ச் சினை யாயது சினேயேயாய்த் தம்முள் வேறு பொருளாகா சொல்லுங் கால் சொல்லுவானது சொல்லுதற் குறிப்பினல் முதலென்றும் சினேயென்றும் வழங்கப்படும். எ-று. சொற்குறிப்பின என்றது, முதல் எனப்பட்ட பொருள் தானே தன்னைப் பிறிதொரு பொருட்கு ஏகதேசப் பொருளாகக் குறித்தவழிச் சினையுமாம் எனவும், சினே எனப்பட்ட பொருள் தானே தன்கண் ஏகதேசப் பொருளே நோக்கி முதலெனக் குறித்தவழி முதலுமாம் எனவும் கூயவாறு. கோட்டது நுனியைக் குறைத் தான்; கோட்டை நுனிக்கட் குறைத்தான்; கோட்டை நுனியைக் குறைத்தான். என முதலுக்கு ஒதப்பட்ட உருபு சினேக்கண்ணும் வந்துளதே என ஐயுற்ற மானுக்கர்க்கு ஈண்டுக் கோடு என்பது சொல்லு வான் கருத்துவகையால் முதற்பொருளாய் நிற்றலின் முதலுக்கு ஒதிய உருபே முதலுக்கு வந்தது என ஐயமகற்றியவாறு . கூல். பிண்டப் பெயரும் ஆயியல் திரியா பண்டியல் மருங்கின் மரீஇய மரபே. இதுவும் அது. (இ.ஸ்) பிண்டத்தையுணர்த்தும் பெயரும், முதற்சினைப் பெய ரியல்பில் திரியா; அவ்வாறு அவற்றை முதலுஞ் சினேயுமாக வழங்குதல் தொன்று தொட்டுப் பயின்று வாரா நின்ற மரபு, எ-று . பிண்டம் என்றது பலபொருட் டொகுதியை . இச்சூத்திரத்தில் ஆயியல் திரியாஎன , மாட்டெறிந்தது. முதற்சினேக் கிளவிக்குப்போலப் பிண்டப் பெயருக்கு முதற்கு அதுவுருபுவரிற் சினேக்கு ஐயுருபுவருதலும், முதற்கு ஐயுருபு வரிற் சினேக்குக் கண்ணுருபு வருதலும், சிறுபான்மை ஐயுருபு வருதலுமாம் -