பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 நிலைமை நோக்கி அல்வழித்தொடரென்றும் வேற்றுமைத் தொடரென்றும் இருவகையாகப் பகுத்துரைப்பர் தொல் லாசிரியர் , பொருளையிடமாகக் கொண்டு நிகழ்வது சொல்லாகும். சொல்லிலக்கணங் கூறக்கருதிய ஆசிரியர், அச்சொல் நிகழ்ச் சிக்கு நிலேக்களளுகிய பொருள்களெல்லாவற்றையும் உயர்திணை யெனவும் அஃறிணையெனவும் இருதிறனுக வரையறுத்து, அப் பொருள் வகைபற்றி நிகழுஞ் சொற்களையும் உயர்திண்ச் சொல் லென்றும் அஃறிணைச் சொல்லென்றும் இருவகையாகப் பகுத் துரைத்தார். திணயென்னும் சொல்லுக்கு ஒழுக்கம் என்பது பொருளாகும். மக்களது நல்லறிவின் பயனுயமைவது ஒழுக்கம். விலங்கு முதலிய சிற்றுயிர்களினின்றும் பிரித்து மக்கட் குலத்தாரை உயர்தினேயெனச் சிறப்பித்து உயர்த்துவது, மனவுணர்வின் பாற்பட்ட நல்லொழுக்கமேயாம். உலக வாழ்வில் மேன்மேல் உயர்ச்சியடைதற்குக் காரணமாகிய இவ்வொழுக்க உணர்வு மக்கட் குலத்தாரிடமே சிறப்பாக அமைந்து வளர்தல் கருதி அவர்களே உயர்திணயெனத் தனிச் சிறப்புடைய தொகுதி யாகவும், நன்றுந் தீதும் பகுத்துணர்ந்தொழுகும் நல்லறிவு வாய்க்கப்பெருத மற்றைய உயிர்களையும் உயிரல் பொருள்களே யும் ஒழுக்க வுணர்ச்சிக்குரியவல்லாத அஃறிணையெனச் சிறப்பில் தொகுதியாகவும் முன்னத் தமிழாசிரியர் பகுத்துள்ளார்கள். இங்ங்ணம் உலகப் பொருள்களெல்லாவற்றையும் உயர்திணை, அஃறிணை என இரண்டாக அடக்கி அவற்றை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து பால்களாகப் பகுத்து இப்பொருள். வேறுபாட்டினை விளங்க அறிந்துகொள்ளுதற்குரிய சொல்லமைப்பினையுடையதாக நம் முன்னேர் தம் தாய்மொழியாகிய தமிழ்மொழியை உருவாக்கி வளர்த்தார்கள். இவ்வாறு சொற்களின் வாயிலாகத் திணே பால்களை விளங்க அறிவிக்கும் முறை தமிழிலன்றி வேறெம் மொழியிலுங் காணப்படாத சிறப்பியல்பாகும். சொல்லிலக்கண வகை முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிய தொல்காப்பிய ஞர், சொற்களைப் பொருள் நிலைமை நோக்கித் தொடர்மொழி,