பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 கூகன். ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின் வேற்றுமை தெரிப வுணரு மோரே. இது, தடுமாறு தொழிற்பெயர்க்கண் வேற்றுமைப் பொருள் உணருமாறு கூறுகின்றது. (இ~ள்) தடுமாறு தொழிலின் இறுதிக்கண் நின்ற பெயர் முன் வரும் பொருள் வேறுபாடுணர்த்தும் சொல்லினல் அப் பொருள் வேற்றுமை தெரிவர் சொல்லின் பொருளே உணர்வோர். 6া-g • ஈற்றுப் பெயராவது, புலிகொல் யானே’ என்புழிக் கொல் என்னும் தொழிலின் இறுதிக்கண் நின்ற பெயர். பெயர் முன் னர் மெய்யறிபனுவல் என்றது, யானே என்னும் பெயரின் பின் வந்து அதன் பொருள் வேறுபாடுணர்த்தும் சொல்லி&ன. (உ-ம்) புலிகொல் யானைக்கோடு வந்தது. எனின் புலியாற் கொல்லப்பட்டது யானே என்பது விளங்கும். புலிகொல் யானே ஒடுகின்றது. எனின், புலியைக் கொன்றது யானே என்பது விளங்கும். இனி, முன்னொரு நாளிற் புலியைக் கொன்ற யானே பிறி தொன்றல் இறந்த நிலையிலும் புலிகொல் யானைக்கோடு வந்தது: என அதன் கோட்டினேக் குறிப்பிடுதல் உண்டு. அந்நிலையிற் கொன்றது, கொல்லப்பட்டது என்னும் வேறுபாடு சொல்லா லன்றிக் குறிப்பில்ை உணரப்படும் என்பார் வேற்றுமை தெரிப உணருமோர் என்ருர் . கூஎ. ஒம்படைக் கிளவிக் கையு மானுந் தாம்பிரி விலவே தொ ைகவரு காலே. இஃது இரண்டாவதும் மூன்ருவதும் மயங்குமாறு உணர்த்து கின்றது . (இ.ஸ்) ஒம்படைப் பொருண்மைக்கு ஐகார வுருபும் ஆனுருபும் ஒத்தவுரிமைய, அவ்வேற்றுமை தொக்கு வருங் காலத்து. எ-று. ஒம்படுத்தல்-பாதுகாத்தல்