பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தனிமொழி யென இருவகைப்படுத்து, அத்தொடர்மொழியை அல்வழித்தொடர், வேற்றுமைத் தொடர் என இருவகைப் படுத்து, அவ்விருவகைத் தொடரும் செப்பும் வினவுமாக நிகழ்தலால் அவற்றை வழுவாமற் கூறுதற்காக முற்படச் சொன்னிலைமையாற் பொருளே உயர்திணை, அஃறிணையென இருவகைப்படுத்தார். அவற்றுள் உயர்திணையுணர்த்துஞ் சொற் களே ஒருவனே யறியுஞ்சொல், ஒருத்தியை யறியுஞ்சொல், பலரை யறியுஞ்சொல் என மூவகைப்படுத்தார். அஃறிணை யுணர்த்துஞ் சொற்களே ஒன்றனேயறியுஞ் சொல், பலவற்றை யறியுஞ் சொல் என இருவகைப்படுத்தார். இங்ங்னம் இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாமல் இருவகை வழக்கிலும் அமைக்க வேண்டுஞ் சொற்களை யெடுத்தோதினர். அதன்பின் வேற்று மைத் தொடர் கூறுவார், மயங்கா மரபினவாகி வருவன எழு வகை வேற்றுமையுணர்த்தினர்; அதன்பின் அவ்வேற்றுமைக் கண் மயங்குமாறுணர்த்தினர்; அதன்பின் எட்டாவதாகிய விளி வேற்றுமையுணர்த்தினர்; அதன்பின் தனிமொழிப் பகுதி யாகிய பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச் சொல் என்பவற்றின் பாகுபாடு உணர்த்தினர்; அதன்பின் சொற்கள் விகாரப்படுமாறும் ஒட்டுமாறும் எஞ்சுமாறும் பிறவும் உணர்த்தினர். எழுத்ததிகாரத்துள் எழுவாய் வேற்றுமையை யும் அதன் திரிபாகிய விளிவேற்றுமையையும் அல்வழிக் கண்ணே முடித்த ஆசிரியர் இவ்வதிகாரத்தே வேற்றுமை களுடன் இயைத்து இலக்கணங் கூறியுள்ளார். இச்சொல்லதிகாரம் ஒன்பது இயல்களால் இயன்றதாகும். கிளவியாக்கத்துள் அல்வழித்தொடரும், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு என்னும் மூன்றியல்களிலும் வேற்றுமைத் தொடரும் உணர்த்தப்பெற்றன. பெயரியவில் பெயரிலக்கணமும், வினையியலில் வினையிலக்கணமும், இடை யியலில் இடைச்சொல்லிலக்கணமும், உரியியலில் உரிச்சொல் லிலக்கணமும், எச்சவியலுள் எஞ்சியன பிறவும் உணர்த்தப் பட்டுள்ளன. இவ்வகையில்ை இவ்வதிகாரத்தின் இயல்களும் ஒன்பதாயின. இனி, தொல்காப்பியத்தை முதனூலாகக் கொண்டு நன் னுால் என்னும் வழிநூல் செய்த பவன்னந்தி முனிவர், தாம் கூற