பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 எனவரும், ஆசிரியற்கு, காவலோனே, புலவரான் எனத் தொடரிறுதிக்கண் நின்ற கு, ஐ, ஆன் என்னும் உருபுகளுள் ‘கு’ என்பது ஈற்று உகரம் கெட அகரத்தொடு பொருந்திக் க? என அகரவிருய் நிற்றலும், ஐகாரம் அகரமாகத்திரிந்து நிற்ற லும், ஆன் என்னும் உருபின் னகரவீறு அகரம்பெற்று ஆன? என நிற்றலும் என்ற மூவகைத் திரிபுகளையும் உள்ளடக்கி 'அவ்வொடு சிவனும் என்ருர் ஆசிரியர். ளக.ை அ எனப்பிறத்த லஃறிணை மருங்கிற் குவ்வும் ஐயும் இல்லென மொழிப. இஃது எய்தியது விலக்கிற்று. (இ-ள்) அஃறிணைப் பெயர்க்கண் வரும் குவ்வுருபும் ஐயுரு பும் முற்கூறியவாறு அகரத்தொடு பொருந்தி ஈறுதிரிதல் இல்லை என்பர் புலவர் . எ~று. அ எனப்பிறத்தல் - அ எனத்திரிதல். குவ்வும் ஐயும் இல் எனவே அஃறிணைக்கண் வரும் ஆனுருபு அகரத்தொடு பொருந் திப் புள்ளினை எனவரும் என்றவாறு . இவ்விரு சூத்திரப் பொருளேயும் தொகுத்துணர்த்தும் முறை யில் அமைந்தது, 317. ஐயான்குச் செய்யுட் கவ்வு மாகும் ஆகா வஃறிணைக் கானல்லாதன. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 'ஐ ஆன் கு என்னும் மூன்றுருபுஞ் செய்யுளகத்து ஒரோ வழி அகரமாகத் திரிந்து வரவும் பெறும். அஃறிணைக் கண் எனின் ஆனென்றுமே திரியும்; ஐயுங் குவ்வுந் திரியா?? என் பது இதன் பொருள். உதாரணம் மேற் காட்டப்பட்டன.