பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

445 ளம். இதன திதுவிற் றென்னுங் கிளவியும் அதனைக் கொள்ளும் பொருள் வயினனும் அதனுற் செயற்படற் கொத்த கிளவியும் முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவியும் பால் வரை கிளவியும் பண்பி னுக்கமும் காலத்தி னறியும் வேற்றுமைக் கிளவியும் பற்றுவிடு கிளவியும் தீர்ந்துமொழிக் கிளவியும் அன்ன பிறவு நான்க னுருபிற் ருென்னெறி மரபின தோன்ற லாறே. இது, நான்காம் வேற்றுமையுருபு ஏனேயுருபுகளின் பொருள் களோடு மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்) இதனது இது இற்று’ என்பது முதல் தீர்ந்து மொழிக்கிளவியீருகச் சொல்லப்பட்டனவும் அத்தன்மைய பிற வும் நான்கனுருபில் தொன்றுதொட்டு வழங்கும் மரபினவாகித் தோன்றுதல் நெறி. எ-று. 'இதனது இது இற்று' என்பது இதனது இது இத்தன் மைத்து என்னும் ஆரும் வேற்றுமைப் பொருள். யானையது கோடு கூரிது என்னும் பொருளில் யானைக்குக் கோடு கூரிது: என வந்தது. அதனேக் கொள்ளும் பொருள்? என்பது, ஒன்றன. ஒன்று கொள்ளும் என்னும் இரண்டாம் வேற்றுமைப் பொருள். ‘இவளேக் கொள்ளும் இவ்வணி என்னும் பொருளில் இவட் குக் கொள்ளும் இவ்வணி2 என வந்தது. அதனுற் செயற்படற்கு ஒத்தகிளவி என்பது, ஒன்றனுன் ஒன்று தொழிற்படுதற்கு ஒக்கும் என்னும் மூன்றும் வேற்றுமைப் பொருள். அவராற் செய்யத்தகும் அக்காரியம் என்னும் பொருளில் அவற்குச் செய்யத்தகும் அக்காரியம்’ என வந்தது. முறைக்கொண்டெழுந்த பெயர்ச் சொற்கிளவி என்பது, முறைப் பொருண்மையைக் கொண்டு நின்ற பெயர்ச் சொல்லி னது ஆரும் வேற்றுமைப் பொருள். ஆவினது கன்று என்னும் பொருளில் ஆவிற்குக் கன்று’ என வந்தது.