பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 46 'பால் வரைகிளவி என்றது, நிலத்தை வரைந்து கூறும் எல்லேப் பொருண்மைய கிய ஐந்தாம் வேற்றுமைப் பொருள். கருவூரின் கிழக்கு என்னும் பொருளில் கருவூர்க்குக் கிழக்கு: என வந்தது. வன்பால், மென்பால் என்னும் வழக்குப்பற்றி நிலத்தைப்பால் என் ருர், பண்பின் ஆக்கம் என்பது, பண்புபற்றி வரும் பொருவுத லாகிய ஐந்தாம் வேற்றுமைப் பொருள். சாத்தனின் நெடியன் : என்னும் பொருளிற் சாத்தற்கு நெடியன்’ என வந்தது. சிற்ப்பு நலன் முதலிய உவமையின் நிலைக்களத்தைப் பண்பு என்பமாதலின் பொரு வினேப் பண்பின் ஆக்கம் என்ருர், காலத்தின் அறியும் வேற்றுமைக்கிளவி என்பது காலத்தின் கண் அறியப்படும் ஏழாம் வேற்றுமைப் பொருள். மாலேக்கண் வருவான் என்னும் பொருளில் மாலேக்கு வருவான் என வரும். பற்றுவிடு பொருண்மையும் தீர்ந்து மொழிப் பொருண் மையும் ஐந்தாம் வேற்றுமைப் பொருள்கள். ஊரிற் பற்றுவிட் டான் என்னும் பொருளில் ஊர்க்குப் பற்றுவிட்டான்? எனவும், ஊரிற்றீர்ந்தான் என்னும் பொருளில் ஊர்க்குத் தீர்ந்தான்? எனவும் வந்தன. அன்ன பிறவும் என்றதன்ை ஊர்க்கட் சென்ருன், ஊர்க் கண் உற்றது செய்வான் என்னும் ஏழாம் வேற்றுமைப் பொருளிலும், ஊரிற் சேயன் என்னும் ஐந்தாம் வேற்றுமைப் பொருளிலும் ஊர்க்குச் சென்ருன், ஊர்க்குற்றது செய்வான், ஊர்க்குச்சேயன் என நான்கா முருபு வருதல் கொள்க. மேற்கூறிய தொகைவிரிப்பு மயங்கும் வேற்றுமைப் பொருள் மயக்கத்தின் வேருக, தொகையல்லாத விடத்து வந்து மயங்கும் பொருள் மயக்கமாதலின் இவற்றை வேறு கூறினர் என்பர் சேனவரையர். ளவிக. ஏனே யுருபும் அன்ன மரபின மான மிலவே பொருள்வயி னன.