பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 எடுத்துக்கொண்ட சொல்லிலக்கணத்தினைப் பெயரியல், விண் யியல், பொதுவியல், இடைச் சொல்லியல், உரிச் சொல்லியல் என்னும் ஐந்தியல்களாற் கூறுகின்ருர். பெயர்ச்சொற்களது இயல்பு பெயரியலிலும், வினைச் சொற்களதியல்பு வினேயியலிலும், பெயர், வினை, இடை, உரி, என்னும் நால்வகைச் சொற் களின் இயல்புகள் சிங்கநோக்காகப் பொதுவியலிலும், இடிைச் சொற்கள தியல்பு இடைச் சொல்லியலிலும், உரிச்சொற்களது இயல்பு உரிச்சொல்லியலிலும் உணர்த்தப்பட்டன என்பர் நன்னூ லுரையாசிரியர் மயிலைநாதர். தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் முதலியலாகிய கிளவி யாக்கத்திலும் ஒன்பதாம் இயலாகிய எச்சவியலிலும் கூறப்பெற்ற சொல்லிலக்கணங்களை நால்வகைச் சொற்க ளுக்குரிய பொது விலக்கணமாத லொப்புமைபற்றி நன்னூ லாசிரியராகிய பவணந்தியார் பொதுவியல் என ஒரியலாக் அடக்கி, அதனைப் பெயரியல் வினையியல்களுக்கும் இடைச் சொல் உரிச் சொல்லியல்களுக்கும் நடுவே சிங்கநோக்காக அமைத்துள்ளார். தொல்காப்பியத்துள் வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு என மூன்றியல்களால் விரித் துரைக்கப்பட்ட வேற்றுமை யிலக்கணங்களைப் பெயரிலக் கணமாதல் ஒப்புமைபற்றிப் பெயரியலோடு இணைத்துப் பெய ரியல் என ஓரியலாகவும், வினச் சொல்லிலக்கணத்தினை வினை யியல் என ஓரியலாகவும் அமைத்துக் கூறியுள்ளார். இவ்வகை யால் நன்னூலிற் சொல்லதிகாரம் பெயரியல் வினேயியல், பொதுவியல், இடைச்சொல்லியல், உரிச் சொல்லியல் என்னும் ஐந்தியல்களையுடையதாயிற்று. அருகதேவனே வழிபடும் சமண சமயச் சான்ருேர கிய பவணந்தி முனிவர், தம்மால் இயற்றப்பெறும் நூல் இனிது நிறைவேறுதல் வேண்டித் தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும் எய்தவுரைக்கும் தற்சிறப்புப் பாயிரமாக இவ்வதி காரத்தின் தொடக்கத்திற் கூறியது, முச்சக நிழற்று முழுமதி முக்குடை அச்சுத னடிதொழு தறைகுவன் சொல்லே.