பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 சொல்லாயும் ஏற்குஞ் சொல்லாயும் வருவன வினையும் பெயரு மாதலின் வினைச்சொல்லால் அறியப்படுந் தொழிற் காரணங் களையும் பெயர்ச் சொல்லால் அறியப்படும் பொருள் வேறுபாட் டினையும் தொல்காப்பியர் இவ்வியலில் இயைத்துக் கூறியுள்ளார். ளயிங். அவைதாம் வழங்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும். இது, மேலதற்கோர் புறனடை. (இ-ள்) மேற்கூறப்பட்ட தொழில் முதனிலைகள்தாம் எல்லாத் தொழிற்கும் எட்டும் வரும் என்னும் யாப்புறவில்லே . வழக்கின் கண் சிலதொழிலிற் குன்றத்தகுவன குன்றிவரும். எ-று. குன்றுதல் - குறைதல். குறைந்து வருவன செயப்படு பொருளும் இன்னதற்கு இது பயன் என்பனவும் ஆம். (உ-ம்) கொடி ஆடிற்று; வளி வழங்கிற்று என்புழிச் செயப்படுபொருளும் ஏற்பதும் பயனுமாகிய காரணங்கள் இல்லே யாயினும் ஏனைய காரணங்களால் ஆடுதலும் வழங்குதலுமாகிய தொழில் நிகழ்ந்தவாறு காணலாம். வினைச்சொல்லின் இலக்கணம் உணர்த்தப் போந்த பவணந்தி முனிவர், தொழிற் காரணங்களாகத் தொல்காப்பி யனர் கூறிய எட்டனுள் கருத்தா , கருவி, நிலம், தொழில், காலம், செயப்படுபொருள் எனச் சிறப்புடைய ஆறு பொரு ளேயும் விளக்குவது வினைச் சொல் என்பதனே, 319. செய்பவன் கருவி நிலஞ் செயல் காலம் செய்பொருளாறுந் தருவது வினேயே. என்ருர். இதன்கண் ஆறும் என்பதனை முற்றும்மை யொரோவழி எச்சமுமாகும். என்பதஞல் எச்சவும்மையாக்கி, இத்தொகையிற் சில குறைந்து வரவும் பெறும் எனப் பொரு ளுரைத்துக் கொடியாடிற்று, கொடிதுஞ்சும் என்புழி முன்னே யது செய்ப்படுபொருளும் பின்னையது செயப்படு பொருளோடு கருவியும் குறைந்துவரும் எனவும், இனி ஆறும் என்னும் உம் மையை உயர்வு சிறப்பும்மையாக்கி இழிந்தன. சிலவுள