பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 யால் சினேயாகு பெயர். குழிப்பாடி நேரிது என்புழி குழிப்பாடி என்னும் இடப்பெயர் அந்நிலத்துப் பிறந்த பொருளாகிய ஆடைக்கு ஆயினமையால் இடவாகுபெயர். நீலஞ் சூடினுள் என்புழி நீலம் என்னும் பண்பின் பெயர் அப்பண்புகொள் பெயராகிய நீலமலருக்கு ஆயினமையாற் பண்பாகு பெயர். இது பொன் என்புழிப் பொன்னென்னுங் காரணப்பெயர் அதனு லியன்ற குடத்துக்கு ஆயினமையின் காரணவாகு பெயர். மக்கட் சுட்டு என இரண்டாய் ஒட்டி நின்றபெயர், மக்களென்று கருதப் படும் உணர்வுடையது மற்ருெரு பொருள்மேல் வருதலின் இரு பெயரொட்டாகு பெயராகும். இவ்வாடை கோலிகன் என்புழிக் கோலிகன் என்னும் வினைமுதலே யுணர்த்தும் பெயர் அவனுல் நெய்யப்பட்ட ஆடைக்கு ஆயினமையாற் கருத்தாவாகு பெயர். ளல்டு. அவைதாம் தத்தம் பொருள் வயிற் றம்மொடு சிவணலும் ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலும் அப்பண் பினவே நுவலுங் காலே வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். இஃது அவ்வாகுபெயர் பொருளுணர்த்தும் நெறியால் இருவகைய என்கின்றது. (இ.ள்) அவ்வாகு பெயர்கள் தாம் இயற்பெயரால் நின்ற காலத்துத் தமக்குரிய பொருளின் நீங்காது நின்று தம் பொருளே விட்டுப் பிரியாத பொருளேயுணர்த்துதலும் அவ்வாறு பொருத்த மில்லாத கூற்றல் நின்று அச்சொல்லோடு ஒருவாற்ருல் தொடர் புடைய வேறு பொருளையுணர்த்துதலும் என அவ்விரண்டி லக்கணத்தையுடையன. சொல்லுங்காலத்து அவற்றின் வேறு பாட்டினைப் போற்றியுணர்க. எ-று. (உ-ம்) கடுத்தின்ருன்-தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவனல். குழிப்பாடி நேரிது-ஒப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டல். - f L