பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 ஒற்றுமையாகிய இயைபுள்வழி அது தத்தம் பொருள் வயிற்றம்மொடு சிவணிற்றென்றும், அவ்வியைபின்றி இடமும் இடத்து நிகழ் பொருளுமாதல்_முதலாகிய இயைபேயாயவழி இது ஒப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டிற்றென்றும் கருதி யுணரப்படுமென்பார், ேேவற்றுமை மருங்கிற் போற்றல் இதுண்டும் என்ருர் என விளக்குவர் சேனவரையர். இனி இதுகுத்திரத்தின் ஈற்றடியாகிய வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்? என்பதனை ஆகுபெயர்க்காவதோர் இலக்கணங் கூறும் தனிச் சூத்திரமாகக் கொண்டு ஆகுபெயர்க்கு ஆவ தோர். வேறுபாடு தெரிந்துணர்க’’ எனவும், அவ்வாகு ஐயரெல்லாம் வேற்றுமையோடு தொடர்ந்த பொருளேப் போற்றியறிக எனவும்: ஆகுபெயர்கள் தத்தம் பொருள் வயிற்றம்மொடு சிவணின என்றும், ஒப்பில்வழியாற் பிறிது பொருள் சுட்டின என்றும் போற்றியுணர்க’ எனவும் மூவகை யாற் பொருள் கூறுவர் இளம்பூரணர். மேற்குறித்த மூன்று. பொருள்களுள் முதலாவதனை விளக்கு மிடத்து, ஆகுபெயர்க்கு ஆவதோர் வேறுபாடு என்னெனின், தொல்காப்பியற்ை சொல்லப்பட்டது தொல்காப்பியம் என கதிரிந்தது என விளக்கங் கூறினர். வெற்பு சேர்ப்பு என்னும் பெயரிறுதிதனே யுடையான் என்னும் பொருள் தோன்ற அன் என்பதோர் இடைச் சொல் வந்து வெற்பன் சேர்ப்பன் 6了汉f நின்றற்போல, தொல்காப்பியன் என்னும் பெயரிறுதி, இவற்ை செய்யப்பட்டதென்னும் பொருள் தோன்ற அம்என்ப தோர் இடைச் சொல் வந்து அன் கெட்டுத் த்ொல்காப்பியம் என நின்றதாதலின் அஃது இயற் பெயராவதன்றி ஆகுபெய ராகாது என மறுத்துரைப்பர் சேவைரையரும் தெய்வச்சிலை யாரும். இனி அவ்வாகுபெயரெல்லாம் வேற்றுமையொடு தொடர்ந்த மருங்கினைப் போற்றியறிக என இரண்டாவதாக இளம்பூரணர் கதிய பொருளை அவ்வாகுபெயர்கள் ஐ முதலிய அறுவகை வேற்றுமைப் பொருண்மையிடத்தும் இயைபுடைமையைப் பாதுகாத்து அறிதல் வேண்டும்’ எனச் சிறிது விளக்கினர்