பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 நச்சினர்க்கினியர். அவ்வுரையைத் தழுவி அவ்வாறு சொல் லுங் காலத்து வேற்றுமைப் பொருட்கண் பாதுகாத்தல் வேண்டும்? என உரைவரைந்த தெய்வச்சிலேயார், ஆகு பெயர் என்பது வேண்டியவாறு சொல்லப்படாது; வேற்றுமைப் பொருட்கண்ணே வரப்பெறுவது என்றவாறு. அவை அப் பொருட்கண் வந்தவாறு: முதலிற் கூறுஞ் சினையறிகிளவியும் சினையிற் கூறும் முதலறிகிளவியும், பண்புகொள் பெயரும், இரு பெயரொட்டும் ஆரும் வேற்றுமைப் பொருண் மயக்கம். பிறந்தவழிக் கூறல் ஏழாம் வேற்றுமைப் பொருண் மயக்கம். இயன்றது மொழிதலும் வினை முதலுரைக்குங் கிளவியும் மூன்ரும் வேற்றுமைப் பொருண் ம்யக்கம் என அவ்வியை பினே உய்த்துணர்ந்து விளக்கிய திறம் ஊன்றியுணரத் தகுவ தாகும் . இனி, ஆகு பெயர்கள் தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணின என்றும், ஒப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டின என்றும் போற்றியுணர்க. என மூன்றுவதாக இளம்பூரணர் கூறிய பொருளைத் தழுவிச் சேவ்ைரையர் உரையமைந்துளது. ளயசு. அளவு நிறையு மவற்ருெடு கொள் வழி உளவென மொழிப வுணர்ந்தி சினுேரே. இதுவும். ஆகுபெயர்க்காவதோர் இலக்கணம் கூறுகின்றது. (இ.ஸ்) அளவுப் பெயரும் நிறைப்பெயரும் ஆகுபெயராகக் கொள்ளும் இடமும் உடைய என்று சொல்லுவர் உணர்ந் தோர். எ-று. (உ-ம்.) பதக்கு, துாணி, நாழி, உழக்கு முதலிய அளவுப் பெயர்களும் தொடி, துலாம் முதலிய நிறைப் பெயர்களும் முறையே அளக்கப்படு பொருளையும் நிறுக்கப்படு பொருளையும் உணர்த்தி ஆகுபெயராய் நின்றமையுணர்க. "நெல்ல அளந்து பார்த்தும் பொன்ன நிறுத்துப் பார்த்தும் பின்னர் அவற் றிற்குப் பதக்கு, தொடி என்று அளவும் நிறையுமாகிய பெயர் கூறப்படுதலின் அவற்றை ஆகு பெயரென்ருர், ஒன்று என்னும்