பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

la)。 ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை யுரைப்பன ஆகுபெயரே. எனவரும் ஒரு சூத்திரத்தால் விளக்கமுறக் கூறினர் பவணந்தி முனிவர். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில், (எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகை) அளவை, சொல், தானி, கருவி, காரியம், கருத்தன் என்னும் இவை முதலானவற்றுள் ஒன்றற்குரிய பெயரானே அதற்கு இயைபுடைய பிறிதொரு பொருளேத் தொன்று தொட்டு வரு முறையே கூறி வருவன ஆகு பெயர்களாம்?? என்பது இதன் பொருள். (உ-ம்:) தாமரை புரையும் சேவடி - முதற் பொருளின் பெயர் சினைக்கு ஆயினமையின் முதலாகுபெயர். அகனமர்ந்து - இடப்பெயர் நெஞ்சத்திற்கு ஆயினமையின் இடவாகுபெயர். கார்த்திகை பூத்தது - காலப்பெயர் அக்காலத்திற் பூக்கும் செங்காந்தளுக்கு ஆயினமையின் காலவாகு பெயர். வெற்றில நட்டான் - சினேப்பெயர் முதலுக்கு ஆயின மையின் சினையாகு பெயர். புளி தின்றன் - புளி என்னும் சுவைப் பண்பின் பெயர் அதனையுடைய பழத்திற்கு ஆயினமையின் பண்பாகு பெயர். வற்றலோடு உண்டான் - தொழிற்பெயர் அதனேயுடைய உணவிற்கு ஆயினமையின் தொழிலாகு பெயர். ஒன்று, இரண்டு, அரை, கால் எனவரும் எண்ணலளவைப் பெயர்கள் முறையே, அஃறிணையொருமைக்கும் பன்மைக்கும் யாக்கையின்கண் உறுப்பிற்கும் ஆயினமையின் எண்ணலளவை யாகுபெயர்களாகும். துலாக் கொணர்ந்தான்-துலா என்னும் எடுத்தலளவைப் பெயர் அவ்வளவினதாகிய பொருளையுணர்த்தினமையின் எடுத்த லளவையாகுபெயர்.