பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 புளி முளேத்தது என்புழிப் புளியென்னும் சுவைப் பெயர் அதனையுடைய பழத்திற்கும், பழத்தின் பெயர் அதன் முதலா கிய மரத்திற்கும் ஆயினமையின் இருமடியாகு பெயராம். காரறுத்தது என்புழிக் கார் என்னும் நிறத்தின் பெயர் அதனையுடைய மேகத்திற்கும் மேகத்தின் பெயர் அது பொழியுங் காலத்திற்கும், காலத்தின் பெயர் அக்காலத்தில் விளேயும் நெல்லுக்கும் ஆயினமையின் மும்மடியாகு பெயராம். தொல்காப்பியனர் கூறிய இருபெயரொட்டு’ என்னும் ஆகுபெயர்க்குப் பொற்றெடி என இளம்பூரணர் காட்டிய உதாரணத்தை அடியொற்றி 'அன்மொழித் தொகைமேல் வரும் இருபெயரொட்டு எனப் பொருள் கூறிய சேவைர்ையர், தொகையாதலுடைமையால் எச்சவியலுள் உணர்த்தப்படும் அன்மொழித்தொகை இயற்பெயர் ஆகுபெயர் என்னும் இரு வகைப் பெயருள் ஆகுபெயர் என ஒன்ருய் அடங்குதல் பற்றி ஈண்டுக் கூறப்பட்டது: என விளக்கமுங் கூறியுள்ளார். பொற் ருெடி என்பது அன்மொழித் தொகையாகுமே யன்றி ஆகு பெயராகாது எனத் தெளிந்துணர்ந்த நச்சினர்க்கினியர், இரு பெயரொட்டு என்பதற்கு அன்மொழிப் பொருள்மேல் நில்லாத இரு பெயரொட்டு? எனப் பொருள்கூறி, மக்கட் சுட்டு’ என உதாரணமுங் காட்டினர். மக்கள் + சுட்டு என்னும் இரு பெயரும் ஒட்டி நின்று மக்களாகிய சுட்டப்படும் பொருள்: என்னும் பொருளைத் தந்தன. இதன்கண் பின்மொழியாகிய சுட்டு என்னும் பெயர் சுட்டப்படும் பொருளே யுணர்த்தி ஆகு பெயராய் நிற்க, மக்கள் என்னும் முன்மொழி அவ்வாகுபெயர்ப் பொருளை விசேடித்து நிற்க, இங்ங்ணம் இரு பெயரும் ஒட்டி நின்றனவாதலின் இதனை இருபெயரொட்டு என்ருர் ஆசிரியர். இதன்கண் பின்னுள்ள மொழியே ஆகுபெயராய் நிற்றலின் இதனைப் பின்மொழியாகு பெயர் என்பாரும் உளர். இனி, பொற்ருெடி எனனும் தொடரின்கண் பொன் என்னும் முதல்மொழி இவ்வாறு அன்மொழித் தொகைப் பொருளே விசேடித்து நில்லாது தொடி என்னும் இயற்பெயர்ப் பொருளையே விசேடித்து நிற்க, அவ்விரு சொற்களின் தொகை