பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. விளிமரபு விளிவேற்றுமையது இலக்கணம் உணர்த்தினமையின் இது விளி மரபென்னும் பெயர்த்தாயிற்று. இதன் கண் உள்ள சூத்திரங்கள் 37. தெய்வச்சிலையார் 36 ஆகப் பகுத்து உரை கூறியுள்ளார். எட்டாவதெனப்படும் விளி வேற்றுமையாவது, படர்க்கைப் பெயர்ப் பொருளை முன்னிலைக் கண்ணதாக எதிர் முகமாக்கு தலைப் பொருளாக வுடையதாகும். பெயரது ஈறுதிரிதல், ஈற் றயல் நீடல், பிறிது வந்தடைதல், இயல்பாதல் என்பன விளி வேற்றுமையின் உருபுகளாகக் கொள்ளத்தக்கன. விளிகொள் ளும் பெயர்கள் இவையெனவும் விளி கொள்ளாப் பெயர்கள் இவையெனவும் ஆசிரியர் இவ்வியலில் உணர்த்துகின்ருர், ளய.அ. விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்றும் இயற்கைய வென்ப. இது, விளிவேற்றுமையின் பொதுவிலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) விளியென்று சொல்லப்படுவன தம்மையேற்கும் பெயரொடு விளங்கத்தோன்றும் இயல்பினேயுடைய என்று கூறுவர் ஆசிரியர். எ-று. ஈறு திரிதலும், ஈற்றயல் நீடலும், பிறிது வந்தடைதலும், இயல்பாதலும் என விளியுருபுகள்தாம் பலவேறு வகைப்படும் என்பார், விளியெனப்படும்? எனப் பன்மையாற் குறித்தார். கொள்ளும் பெயர்? எனவே கொள்ளாப் பெயரும் உள். என்பது பெற்ரும். எத்தகைய திரிபுமின்றி இயல்பாய் விளி யேற்கும் பெயரும் அவை விளியாய் நிற்றல் தெற்றென விளங், கும் என்பார் தெளியத் தோன்றும் என்றர்.