பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ளயக. அவ்வே, இவ்வென அறிதற்கு மெய்பெறக் கிளப்ப. இஃது இவ்வியலில் விரித்துரைக்கப்படும் விளியுருபுகட்குத் தோற்றுவாய் செய்கின்றது. (இ-ள்) விளியெனப்படுப என மேற் சூத்திரத்துச் சுட்டப்பட்ட விளியுருபுகளாவன இவையென மாணுக்கர் உணர்தற் பொருட்டு இவ்வியலில் வடிவு பொருந்தக் கூறப் படும். எ று மெய் - வடிவு; ஈண்டு உருபு என்னும் பொருளில் ஆளப் பெற்றது. விளி வேற்றுமையாவது கொள்ளும் பெயரின் வேறன்றி அவை தாமேயாய் நிற்றலின் அவ்வே என்னும் சுட்டு விளியேற்கும் பெயர்களேயும் அவற்றின் ஈறுகளாகிய உருபுகளேபும் ஒருங்கு சுட்டி நின்றது என்பது சேவைரையர் கருத்தாகும். இவ்விரு சூத்திரப் பொருளேயும் விரித்துரைக்கும் முறையில் அமைந்தது, 802. எட்ட னுருபே எய்துபெய ரீற்றின் திரிபு குன்றல் மிகுதல் இயல் பயற் றிரிபு மாம்பொருள் படர்க்கை யோரைத் தன்முக மாகத் தானழைப் பதுவே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். எட்டாம் வேற்றுமையின் உருபாவது விளியேற்கும் பெயரின் ஈற்றது திரியும் கேடும் மிகுதலும் இயல்பும் ஈற்றயல் நின்றதன் திரிபும் ஆகும். அதற்குப் பொருள் படர்க்கையிடத் தாரை ஒருவன் தனக்கு எதிர்முகமாக அழைத்தலாகும்?? என்பது இதன் பொருள். விளியேற்கும் பெயர்களே உயர்திணைப்பெயர், விரவுப் பெயர், அஃறிணைப்பெயர் என மூவகைப்படுத்து அவை முறையே