பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16i உயிரீற்றிலும் மெய்யீற்றிலும் விளியேற்குங்கால், ஈறுதிரிதல், ஈற்றயல் நீடல், பிறிது வந்தடைதல், இயல்பாதல் என்னும் உருபுகளைப் பெற்று வருதலையும் விளியேலாப் பெயர்கள் இவை என்பதனையும் தொல்காப்பியர் ஈறுபற்றி இவ்வியலில் முறையே உணர்த்துகின்ருர், ள உம். அவைதாம், இ உ ஐ ஒ வென்னு மிறுதி அப்பால் நான்கே யுயர் திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டி விளிகொள் பெயரே. இஃது, உயர்திணைப் பெயருள் விளியேற்பன இவையென் கின்றது. (இ-ள்) சொல்லப்படுவனவாகிய பெயர்தாம் இ, உ, ஐ, ஓ என்னும் இறுதியையுடைய அக்கூற்று நான்கு பெயரும் உயர் திணேப் பெயருள் விளி கொள்ளும் பெயர். எ று. 'அஃறிணைப் பெயராய் ஆகுபெயராய் உயர்திணைக்கண் வந்துழியும், விரவுப் பெயர் உயர்திணைக்கண் வருங்காலும், அவை விளியேற்குமிடத்து உயர்திணைப் பெயராம் என்றற்கு “உயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய என்ருர் ! என்பர் சேவைரையர். அவைதாம் என்னும் எழுவாய் அப்பால் நான்கு என்னும் பயனிலே கொண்டது. மேற் கூறப்பட்ட நான்கீறும் விளியேற்குமாறு பின்வரும் சூத்திரங்களாற் கூறப்படும். ள உக. அவற்றுள், இஈ யாகும் ஐ யாயாகும். (இ-ள்) அந் நான் கீற்றினுள் இகரம் ஈகாரமாயும் ஐகாரம் ஆப் ஆகியும் விளியேற்கும். எ-று. (உ-ம்) நம்பி, நம்பீ; நங்கை, நங்காய் என வரும்.