பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 ள உடு. அளபெடை மிகூஉம் இகர விறுபெயர் இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப. (இ-ள்) தன்னியல்பு மாத்திரையின் மிக்கு நான்கும் ஐந்தும் மாத்திரை பெற்றுவரும் இகரவீற்று அளபெடைப் பெயர் இயல்பாய் விளியேற்குஞ் செயற்கையை யுடையன வாகும். எ-று. (உ-ம்:) செவிலி இஇஇஇ , தோழிஇஇஇஇ என வரும். இகர விறுபெயர் - இகரத்தால் முடிந்த பெயர் இயற்கைய வாதல் - வேறு திரிபினேப் பெருமை. செயற்கையவாதல்- அளபெடைக்குரிய மூன்று மாத்திரையாகி மிக்கொலித்தல். ள உசு. முறைப்பெயர் மருங்கின் ஐயெ னிறுதி ஆவொடு வருதற் குரியவும் உளவே. இஃது எய்தியதன் மேற் சிறப்பு விதி. (இ.கள்) முறைப் பெயரிடத்து ஐகார வீறு (முற்கூறிய வாறு ஆய் எனத் திரிதலேயன்றி) ஆ எனத் திரிந்து வரு தற்கு உரியனவும் உள. எ-று. (உ-ம்:) அன்னை, அன்ன; அத்தை, அத்தா எனவரும். உயிரீற்றனவாகிய உயர்திணைப் பெயர்க்கும் அவ்வீற்று முறைப் பெயராகிய விரவுப் பெயர்க்கும் விளியேற்குந் திறத்தில் வேற். றுமையின்மையால் உயர்திணைப் பெயரொடு முறைப் பெயரை யும் சாரவைத்தார். முறைப்பெயராகிய இப்பொதுப் பெயர் களின் ஈற்று ஐகாரம் ஆய் எனவும் ஆ எனவும் திரிந்து விளி யேற்றலேயும், உயர்திணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணும் ஐகார வீற்றுப்பெயர் ஆய் எனத்திரிந்து விளியேற்றலேயும், 305. ஐயிறு பொதுப் பெயர்க் காயுமாவும் உருபாம் அல்லவற்று ஆயுமாகும் என்ற சூத்திரத்தால் எடுத்துரைத்தார் பவணந்தியார்.