பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 ள உள். அண்மைச் சொல்லே இயற்கையாகும். எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது. (இ-ள்) முற்குறித்த நான்கீற்று அண்மைச் சொல்லும் இயற்கையாய் விளியேற்கும். எ-று. அண்மைக்கண் விளிகொள்வதனை அண்மைச்சொல்? எனக் குறித்தார். (உ-ம்) நம்பி வாழி, வேந்து வாழி, நங்கை வாழி, கோ வாழி என வரும். ள உ.அ. ன ர ல ள வென்னும் அந்நான் கென்ப புள்ளி யிறுதி விளிகொள் பெயரே. உயர்திணைக் கண் மெய்யீற்றுள் விளியேற்பன இவையென் கின்றது. (இ.ள்) மெய்யீற்று உயர்திணைப் பெயர்களுள் விளி கொள்வன ன ர ல ள என்னும் அந்நான்கீற்றன என்று சொல்லுவர் ஆசிரியர். எ-று. ன ர ல ள என்னும் மெய்களே யிருகவுடைய சொல்லே ன ர ல ள எனக் குறித்தார். ள உக.ை ஏனேப் புள்ளி யிறு.விளி கொள்ளா. இஃது ஐயம் அகற்றியது. (இ-ள்) மேற் சொல்லப்பட்ட நான்கீறுமல்லாத ஏனை மெய்யீற்றுப் பெயர்கள் விளியேலா. எ-று. சிறுபான்மை ஏனைப் புள்ளியிறு விளி கொள்ளுதலும், முற்கூறப்பட்ட மெய்யீறுட் சில பிறவாற்ருன் விளிகொள்ளுதலும் கொள்ளப்படும். (உ-ம்:) விளங்குமணிக் கொடும்பூண் ஆய்' என ஏனைப் புள்ளியாகிய யகரவீறு சிறுபான்மை விளியேற்றது. பெண்டிர் பெண்டிரேர் எனவும், தம்முன், தம்முளு எனவும் கூறப் பட்ட ரகர னகர வீறுகள் பிறவாற்ருன் விளியேற்றன.