பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கிளவியாக்கம் கிளவி-சொல். ஆக்கம்-ஆதல் சொற்கள் பொருள் மேல் ஆமாறுணர்த்தினமையின் கிளவியாக்க மென்னும் பெயர்த் தாயிற்று என இளம்பூரணரும், வழுக்களைந்து சொற்களை அமைத்துக் கொண்டமையால் கிளவியாக்கமாயிற்று எனச் சேனவரையரும் நச்சிர்ைக்கினியரும், சொற்கள் ஒன்ருே டொன்று தொடர்ந்து பொருள்மேல் ஆகும் நிலமையைக் கூறுவது இவ்வியலாதலின் கிளவியாக்கம் என்னும் பெயர்த் தாயிற்று எனத் தெய்வச் சிலையாரும் இவ்வியலுக்குப் பெயர்க் காரணங் கூறினர். கிளவியது ஆக்கத்தைக் கூறுவது கிளவி யாக்கம் என வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன் மொழித் தொகையாகக் கொண்டார் தெய்வச்சிலையார். இவ் வியலின் சூத்திரங்கள் அறுபத்திரண்டென இளம்பூரணர் நச்சினர்க்கினியரும், அறுபத்தொன்றெனச் சேவைரைய ரும் ஐம்பத்தொன்பதெனத் தெய்வச் சிலேயாரும் பகுத்து 盛一6ö貌” கூறியுள்ளார்கள். க. உயர் திணை யென்மஞர் மக்கட் சுட்டே அஃறிணை யென் மனர் அவர ல பிறவே ஆயிரு தினேயி னிசைக்குமன சொல்லே. இது, சொல்லேயும் பொருளையும் வரையறுத்துரைக்கின்றது. இதன் பொருள் :- உயர்திணையென்று சொல்லுவர், மக் களென்று சுட்டப்படும் பொருளே; அஃறிணையென்று சொல்லு வர் அவரல்லாத (உயிர்ப்) பொருளையும் பிற (உயிரல்) பொரு ளேயும்; அவ்விருதினைப் பொருள்களையும் சொற்கள் உணர்த் தும் என்றவாறு . உயர்திணையும் அஃறிணையும் எனப் பொருள்கள் இருதிறப் படுதலால், அவற்றை உணர்த்தும் சொற்களும் உயர்தினைச் 1