பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 69 (இ-ள்) தான் என்னும் பெயரும் அவன் இவன் உவன் என்னுஞ் சுட்டுமுதற் பெயரும், யான் என்னும் பெயரும் யாவன் என்னும் வினவின் பெயரும் ஆகிய அவ்வனேத்தும் னகரவீற்றுள் விளியேலாப் பெயர்களாம். எ-று. ளக.அ ஆரும் அருவும் ஈரொடு சிவனும் இது, ரகரவீறு விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்) , ரகாரவீற்றுள் ஆர், அர் என நின்ற இரண்டும் ஈராய் விளியேற்கும். (உ-ம்) சான்ருர், சான்றீர் எனவும் கூத்தர், கூத்தீர் எனவும் வரும். ளங்க.ை தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும் வழுக்கின் றென் மனர் வயங்கி யோரே. இஃது எய்தியதன் மேற்சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்) மேற்கூறிய இரண்டிற்றுத் தொழிற் பெயரும் ஈரெனத் திரிதலோடு ஏகாரம் பெற்று வருதலும் குற்றமின்று என்பர் விளங்கிய அறிவினையுடையோர், ஏ-று. (உ-ம்) வந்தார், வந்தீரே; சென்ருர், சென்றீரே, என வரும். அர்ஈறு வந்துழிக் கண்டு கொள்க. வழுக்கின்று என்பதல்ை, தொழிற் பெயரல்லாத ஆரீறு களும் ஈரோடு ஏகாரம் பெறுதலும், சிறுபான்மை அர்ஈறு ஈர் பெருது ஏகாரம் பெற்றுவருதலும் கொள்ளப்படும். (உ-ம்) நம்பியார், நம்பியீரே; கணியார், கணியிரே எனவும் வந்தவர், வந்தவரே; சென்றவர், சென்றவரே என வும் வரும். ளச). பண்புகொள் பெயரும் அதனே ரற்றே. இதுவும் அது.