பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 ஈகாரமாய் ஏகார மேற்றலும், ஈற்றில் ஏகாரமிக்கு அயலில் யாக் கெட்டு அதனயலில் இகரம் ஈகாரமாதலும் ஈற்றின் ஈர் ஆதலும் என்றிவையும் விளிபுருபாம்: ) என்பது இதன் பொருள் . (உ-ம்.) சிருஅர் - அளபெழுந்தது. தெவ்விர் - அகரம் இகரமாயிற்று. வேந்திர் - அகரம் ஈகாரமாயிற்று மடவீர் - ஈற்றயல் ஆகாரம் ஈகாரமாயிற்று. கணியீரே- ஈற்றயலில் ஆகாரம் ஈகாரமாய் ஏகாரம ஏறறது . நம்பிரே - ஏகாரமிக்கு ஈற்றயலில் யாக்கெட்டு அதனயலில் இகரம் ஈகாரமாயிற்று. எமரீர் - ஈர் ஏற்றது. 'ஈண்டு என்ற மிகையானே, கடலிரே சாத்தியீரே என அஃறிணேப் பெயர்களும் விரவுப் பெயர்களும் இவ்வாறு வருவன கொள்ளப்படும். ளச.உ. சுட்டு முதற் பெயரே முற்கிளந் தன்ன. இது, ரகர வீற்றுள் விளியேலாதன இவையென்கின்றது. (இ-ள்) அவர், இவர், உவர் என்னும் ரகர வீற்றுச் சுட்டு முதற்பெயர் னகரவீற்றுச் சுட்டு முதற் பெயர் போல விளி கொள்ளா. எ-று. ளசங். நும்மின் திரிபெயர் வினவின் பெயரென் றம் முறை யிரண்டும் அவற்றியல் பியலும். இதுவும் அது. (இ-ள்) நும்மின் திரிபெயராகிய நீயிர் வினவின் பெயர: கிய யாவர் என்று சொல்லப்பட்ட அம் முறைமையினையுடைய இரண்டும் மேற்கூறிய சுட்டுப் பெயர் போல விளியேலா. எ.று. நீயிர் என்பது நும்மெனத்திரிந்தது என்னுங் கருத்தினே யுடன்படாது நும் என்பதே நீயிர் எனத் திரிந்தது எனத்தாம்