பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 ளடும். கிளந்த விறுதி யஃறிணை விரவுப் பெயர் விளம்பிய நெறிய விளிக்குங் காலே. இது, விரவுப்பெயர் விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்) மேல் உயர்திணைக்கண் விளியேற்கும் என்று கூறப் பட்ட எட்டீற்றினே யு முடைய (உயர்தினேயொடு) அஃறிணை விரவும் விரவுப் பெயர்கள், விளியேற்குமிடத்து அவ்வீறுகளின் எடுத்தே திய முறைமையினையுடைய. எ-று. கிளந்த இறுதியாவன இ உ ஐ ஒ என்னும் உயிரீறு நான் கும் ர ல ள என்னும் புள்ளியீறு நான்குமாகிய எட்டீறுகள். (உ-ம்) சாத்தி, சாத்தீ; பூண்டு, பூண்டே, தந்தை, தந்தாய்; சாத்தன், சாத்தா, கூந்தல், கூந்தால்; மக்கள், மக்காள் என வரும். ஓகாரவீறும் ரகார வீறுமாய் வருவன விரவுப் பெயருள வேற் கண்டு கொள்க’ என்பர் இளம்பூரணர். 'இனி, விளிக்குங்காலே என்ற தனுற் பினவாராய், அழிது வாராய் என எடுத்தோதாத ஆகார ஊகார வீற்று விரவுப் பெயர் இயல்பாய் விளியேற்றலும், சாத்தன் வாராய், மகள் வாராய், தூங்கல் வாராய், என்று எடுத்தோதிய ஈறுகள் கூறிய வாறன்றி இயல்பாய் விளியேற்றலும், இப்பெயர்கள் ஏகாரம் பெற்று விளி யேற்றலுங் கொள்க: என்பர் நச்சிஞர்க்கினியர். ளடுக. புள்ளியு முயிரு மிறுதி யாகிய அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும் விளிநிலே பெறு உங் கால ந் தோன்றின் தெளிநிலே யுடைய ஏகாரம் வரலே. இஃது அஃறிணைப் பெயர் விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்) மெய்யீறும் உயிரீறுமாகிய அஃறிணையிடத்து வரும் எல்லாப் பெயர்களும், விளியேற்குங் காலந்தோன்றில் ஏகாரம் பெறுதலேத் தெளிவாகவுடையது. எ-று. (உ-ம்.) மரம், மரமே; அணில், அணிலே; புலி, புலியே; கிளி, கிளியே எனவரும்.