பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 அஃறிணைப் பெயருள் விளிகேட்கும் ஒருசார் விலங்கின் பெயரும், விளி கேளாதனவற்றைக் கேட்பன போலச் சொல் லுவர் கருதியவாற்ருன் விளியேற்பனவுமல்லது, ஒழிந்த பெய ரெல்லாம் விளி ஏலாமையின், விளிநிலே பெறு உங் காலந் தோன்றின் என்ருர். அதனனே சுட்டுப்பெயர் முதலாயின விளியேலாமையுங் கொள்க’ என விளக்கந் தருவர் சேன வரையர் . ஏகாரம் பெற்று விளியேற்றல் தெளிநிலையுடைய, எனவே, அந்நிலையின்றிச் சிறுபான்மை பிறவாற்ருன் விளியேற்பனவும் உள என்பது பெறப்படும். அவையாவன: வருந்தினை வாழி யென் நெஞ்சம், கருங்கால் வெண்குருகு ஒன்று கேண்மதி, காட்டுச் சாரோடுங் குறு முயால், ஒண்டுவி நாராய்? என்னுந் தொடக்கத்தன. உயர்திணைப் பெயர், விரவுப்பெயர், அஃறிணைப்பெயர் என்னும் மூவகைப் பெயர்க்கும் உரிய விளியுருபுகளே, 304. இம்முப் பெயர்க்கண் இயல்பும் ஏயும் இகர நீட்சியும் உருபா மன்னே. எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிடுவர் நன்னூலார் . உயர்திணைப்பெயர், பொதுப்பெயர், அஃறிணைப்பெயர் என்னும் மூவகைப் பெயர்க்கண்ணும் எல்லா ஈறும் இயல்பாத லும், அவற்றின்கண் ஏகார மிகுதலும், இகரவீறு ஈகார விருய்த்திரிதலும் விளிவேற்றுமைக்கு உருபுகளாம். என்பது இதன் பொருளாகும். ளடுஉ. உளவெனப்பட்ட எல்லாப் பெயரும் அளபிறந்தனவே விளிக்குங் காலைச் சேய்மையி னிசைக்கும் வழக்கத்தான. இது மூவகைப் பெயர்க்கும் எய்திய விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.