பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சொல் அஃறிணைச் சொல் என இருவகைப்படும் என வரை யறுத்தவாறு : உயர்திணை-உயர்ந்த ஒழுக்கம்; அஃது ஆகுபெயராய், உயர்தற்கேற்ற ஒழுக்கமுடைய மக்களினத்தை யுணர்த்தி நின்றது. ஜம்புலவுணர்வாகிய ஐயறிவுடைய மாக்களின் வேறுபட்டுத் தீதொரீஇ நன்றின்பாற செலுத்தும் மனவுணர் வாகிய ஆருவதறிவினைப் பெற்று மக்கள் தாமே யாறறிவுயிரே? (தொல்-மரபு-83.) என உயர்த்துக் கூறும் நன்கு மதிப்புப் பற்றி உயர்திணை என்மனர் மக்கட்சுட்டே என்ருர் . உயர் திணை என்பது வினைத்தொகை. உயர்ந்த மக்கள், உயரா நின்ற மக்கள், உயரும் மக்கள் என முக்காலமும் விரித் துரைத்தற்கேற்ற வகையில் இத்தொடர் அமைந்துள்ளமை காண்க. என்மனுர் என்பது ஆர் ஈற்று எதிர்கால வினைமுற்று. மக்கட் சுட்டு-மக்களாகிய நன்கு மதிக்கப்படும் பொருள். சுட்டு-நன்கு மதிப்பு: அஃது ஆகுபெயராய் நன்கு மதிக்கப் படும் பொருளே உணர்த்தி நின்றது. மக்கட் சுட்டு என்ற தொடரில் முன்னின்ற மக்கள் என்பது இயற் பெயர்ப் பொருளே யுணர்த்தப் பின்னின்ற சுட்டு என்னும் பெயரே ஆகுபெயர்ப் பொருளே யுணர்த்த இரு பெயரும் ஒருபொருளையே உணர்த் தும் முறையில் ஒட்டி நின்றனவாதலால் இதனை இரு பெயரொட் டாகுபெயரென்பர் நச்சினுர்க்கினியர். மக்களாவார் ஒருதன்மையரன்றி ஆண், பெண் , அலி என்னும் வடிவுவேற்றுமை உடையராகலின், அவரெல்லாரிடத் தும் பொதுவாக அமைந்துள்ள மக்கட்டன்மையைக் குறித்து மக்கள் இவர் என்னும் பொதுப் பொருண்மை உயர்திணையாம் என்பதறிவித்தற்கு மக்கள் என்னுது மக்கட் சுட்டு என்ருர் எனவும், மக்களல்லாத உயிருடையனவும் உயிரில்லனவாகிய பிறவும் அஃறிணையாம் என்பதறிவித்தற்கு அவரலபிற என்ருர் எனவும் கூறுவர் தெய்வச்சிலேயார், உயர்திணையல்லாத திணே அஃறிணையாதலின் அல்திணை அஃறிணை யென்ருயிற்று. உயர் திணை அஃறிணை என்பன தம் காலத்துக்கு முற்பட்ட தொல் லாசிரியர் வழங்கிய இலக்கணக் குறியீட்டுச் சொற்களாதலின் உயர்திணை மக்கள், அஃறிணை அவரல்லாதனவும் பிறவும் என