பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 அதனை முதலாகவுடைய திருக்குறளே யுணர்த்திற்று. அலங் குளேப்புரவி ஐவரொடு சினே இ? என்புழி ஐவர் என்னும் தொகைக்குறிப்பு பாண்டவரைக் குறிப்பால் உணர்த்தியது. * கற்கறித்து) நன்கு அட்டாய், நீயிர்பெரிதும் அறிதிர், பாயா வேங்கை, பறவாக்குளவி எனவும் உவர்க்கடலன்ன செல்வரு முளரே, கிணற்றுாற்றன்ன நீயுமாருளே:ே எனவும் இவ்வாறு பலவாற்ருன் வரும் சொற்களும் எழுத்துப் பெருக்கம், ಸ್ಟ್ರ சுருக்கம், மாத்திரைச் சுருக்கம், வினவுத் தரம் என அணி நலம் பெற வருவன பிறவும் குறிப்பினல் தத்தம் பொருள்களே யுணர்த்துவனவாகும். இன்னபிறவும் என்றமையானே தெரிநிலை , குறிப்பு என்னும் வினையாலணேயும் பெயர்களும், முற்றெச்சங்களும் செய்யுமென்னு முற்றும், அன்று இன்று, என்னும் வினேயெச்சக் குறிப்பும், கேட்குநபோலவும்...... அஃறிணை ம்ருங்கிற் கூறப்படுதல் முதலிய இலக்கணைகளும் இவை போல்வன பிறவும் கொள்ளப்படும். இவ்வாறன்றி நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்றற் ருெடக்கத்தனவெல்லாம் வெளிப்படையிற் பொருளுணர்த்து வனவாகும். சொற்பொருளே, வாச்சியம், வியங்கியம், இலக்கண என மூன்ருகப் பகுத்துரைப்பர் வடநூலார் வாச்சியம் என்பது வெளிப்படை வியங்கியம் என்பது குறிப்பு. இலக்கண என் பது, ஒரு பொருளினது இலக்கணத்தை மற்ருெரு பொரு ளுக்குத் தந்துரைப்பது. அது, விட்ட விலக்கண, விடாத விலக்கண, விட்டும் விடாதவிலக்கண என மூவகைப்படும் என்பர். சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெருந் துணேயும் நின்றதுகொல் நேர்மருங்கிற் கையூன்றி - முன்றின் முழங்குங் கடாயான மொய்ம்மலர்த்தார் மாறற் குழந்து பின் சென்றவென் னெஞ்சு: