பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 அச்சொற்களுக்குப் பொருள் விளக்கம் தந்தார் தொல்காப்பியர். அவ்+இருதினே=ஆயிருதின யெனச் சுட்டு நீண்டது. ஆயிரு திணையின் என்புழிச் சாரியையுள்வழி இரண்டாம் வேற்றுமை யுருபு மறைந்து நின்றது. இவ்வாறே மறங்கடிந்த வருங் கற்பின் எனவும் சில சொல்லிற் பல்கூந்தல் எனவும் பிற சான்ருேர் செய்யுளகத்தும் இன்சாரியை உருபு பற்ருது நிற்றல் காண்க. இசைத்தல்-ஒலித்தல்; ஈண்டு இச்சொல் உணர்த்தல் என்னும் பொருளில் ஆளப்பெற்றது. அவரலபிற என்புழி அவரலவும் பிறவும் என உம்மை விரித்துரைப்பர் தெய்வச் சிலேயார். அவரல பிற என்புழி அவரின் அல்லவாகிய பிற என நீக்கப் பொருள்தரும் இன்னுருபு விரித்துரைத்தலும் உண்டு. சொல்லதிகாரத் தொடக்கத்தில் சொல்லின் கூறுபாடும் அதன் இயல்பும் உணர்த்தப் போந்த நன்னூலாசிரியர், 259. ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி யென்ரு இருதினே யைம்பாற் பொருளேயுந் தன்னேயும் மூவகை யிடத்தும் வழக்கொடு செய்யுளின் வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே. என்ருர், (இ-ள்) ஒரு மொழியும் தொடர்மொழியும் பொதுமொழியும் என மூன்று கூறுபாட்டினையுடையதாய், இருதினையாகிய ஜம் பாற் பொருளினையும் அப்பொருளை யன்றித் தன்னையும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்றிடத்தினும் உலக வழக்கி லும் செய்யுள் வழக்கிலும் வெளிப்படையாலும் குறிப்பிலுைம் விளக்குவது சொல்லாம். எ-று. எனவே, எல்லாச் சொல்லும் ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்னும் மூன்ரு யும், எல்லாப்பொருளும் இருதினை ஐம்பாலாயும் அடங்குமென்பதும், உயிர்க்கு அறிவு கருவியாய் நின்று தன்னையும் பொருளையும் உணர்த்துமாறு போல, ஒரு வர்க்குச் சொல் கருவியாய் நின்று தன்னையும் இருதினை யைம் பாற் பொருளையும் உணர்த்துமென்பதும் பெறப்படும்.