பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 நிலப்பெயர் - பிறந்த நிலத்தினுற் பெற்ற பெயர்; அருவா ளன், சோழியன் முதலியன. குடிப்பெயர் - பிறந்த குடியினுற் பெற்றபெயர்;மலேயமான், சேரமான் முதலியன. குழுவின் பெயர் - ஒரு துறைக்கண் உரிமை பூண்ட பல் லோர் கூடிய குழுவினைக் குறித்து வழங்கும் பெயர்; அவையத் தார், ஆத்திகோசத்தார் முதலியன. வினைப்பெயர் - செய்யுந்தொழில் காரணமாக வழங்கும் பெயர்; தச்சன், கொல்லன் முதலியன. உடைப்பெயர் - ஒன்றனே உடைமை காரணமாக வழங் கும் பெயர்; அம்பர் கிழான், பேரூர்கிழான், வெற்பன் , சேர்ப்பன் முதலியன. பண்புகொள் பெயர்-குறித்ததோர் பண்புடைமை காரண மாக வழங்கும் பெயர்; கரியான் நெடியான் முதலியன. பல்லோர்க் குறித்த முறை நிலைப் பெயர் - பல்லோரைக் கருதி முறைமை காரணமாக வழங்கும் பெயர்; தந்தையர், தாயர், மாமியர் முதலியன. பல்லோர்க் குறித்த சிஜன நிலைப்பெயர் - பல்லோரைக் கருதிச் சினை காரணமாக வழங்கும் பெயர்; பெருங்காலர், பெருந்தோளர் முதலியன.

பல்லோர்க் குறித்த என்று விசேடித்தலான் இம்மூவகைப் பெயருள் ஒருமைப் பெயர் இரண்டு திணைக்கும் உரியவாம்?? என்பர் இளம்பூரணர்.

பல்லோர்க்குறித்ததிணை நிலைப்பெயர்-பல்லோரைக் கருதித் திணைகாரணமாக வழங்கும் பெயர்; ஆயர் வேட்டுவர் முதலியன. கூடிவரு வழக்கின் ஆடியற்பெயர்-இளையோர் ಟ್ರಖfಆ. விளையாடும் காலத்து ஆடல் குறித்துப் படைத்து இட்டு வழங்