பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 குடி, சிறப்பு முதலிய பண்பையும், ஒதல் ஈதல் முதலிய பல தொழிலையும் (பொருள் முதலாகிய) இவற்றைப் பொருந்தி வருகின்ற மூன்று சுட்டையும், மூன்று முதல் விைைவயும், பிற மற்று என்பவற்றையும் பொருந்தி னகரத்தை ஈருகக் கொண்டு வரும் பெயர்களும், நம்பி, ஆடுஉ, விடலே, கோ, வேள், குருசில், தோன்றல் என எடுத்தோதப்பட்டனவும் இவை போல்வன பிறவுமாகிய பெயர்களும் ஆண்பாற்குரிய பெயர் களாம்? என்பது இதன் பொருள். தமன், நமன், நுமன் என்பன கிளேப்பெயர். கிளே-சுற்றம், தநநு எம் முதல் மகரமிடையிட்டு, னளரவாமீற்றன சுற்றப் பெயரே 2 என்ருர் பிறரும். சுட்டு, வீன, பிற , மற்று 6了6夺了 வரும் இடைச்சொல் நான்கும் தமக்கென ஒரு பொருளின்றிப் பொருள் முதலாறனுள் யாதானுமொன்றைக் கூறுவான் குறிப் பின் வழி அடைந்துணர்த்துதலின் இவையடை சுட்டு வினப் பிற மற்று, என்ருர். விச்ை சுட்டுடனும் வேறுமாம் பொரு ளாதி என்பதும் அது. இன்னன என்றமையான், வில்லி, வாளி, மீளி, குடுமி, சென்னி, கிள்ளி, செட்டி, முதலி என்றற்ருெடக்கத்து உயர்திணை ஆண்பாற்பொருள் குறித்து வருவன எல்லாங் கொள்ளப்படும்.

  • இவையடை சுட்டு வினப் பிற மற்ருேடு உற்றனவ்வீறு: என்பவற்றிற்கு, அப்பொருளன், இப்பொருளன், உப்பொருளன், எப்பொருளன், பிறபொருளன், மற்றப்பொருளன் 6T 63r உதாரணங் காட்டுவாருமுளர். இவ்வுதாரணங்களில் சுட்டு முதலிய நான்கைேடும் னகரவீறு உறுதலின்மையால் அவற் றிற்கு அவை உதாரணமாகா என்பர் சிவஞான முனிவர்.

276. கிளே முதலாகக் கிளந்த பொருள்களுள் ளவ் வொற்றிகரக் கேற்ற வீற்றவும் தோழி செவிலி மகடூஉ நங்கை தையலோ டின்னன பெண்பாற் பெயரே. என வரும் நன்னூற் சூத்திரம், உயர்திணைப் பெண்பாற்குரிய பெயர் உணர்த்துவதாகும்.