பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 G மேலைச் சூத்திரத்து நிறுத்த முறையானே மூவகை மொழி கள் ஆமாறு உணர்த்தப் போந்த பவனந்தியார், 260. ஒருமொழி யொருபொரு ளனவாந் தொடர் மொழி பலபொரு ளன.பொது விருமையு மேற்பன. &T সে স্ট্র 肝。 (இள்ை) பகாப்பதமேனும் பகுபதமேனும் ஒன்று நின்று தத்தம் ஒருபொருளைத் தருவன ஒருமொழிகளெனப்படும். அவ்விருவகைப் பதங்களும் தன்குெடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப் பொருள் நோக்கத்தால் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து நின்று இரண்டுமுதலிய பலபொருளைத் தருவன தொடர்மொழிகளெனப்படும். ஒன்ருய்நின்று ஒரு பொருள் தந்தும் அதுவே தொடர்ந்து நின்று பலபொருள் தந்தும் இவ் விரண்டற்கும் பொதுவாய் நிற்பன பொதுமொழிகளெனப் படும். று. (உ. ம்) நம்பி, நங்கை, மாந்தர், சாத்தன், சாத்தி, நிலம், நீர், மண், பொன், வந்தான், வந்தாள் வந்தார், வந்தது, வந்தன, தில், மன், சால, தவ என்றற்ருெடக்கத்தன ஒரு மொழி. நிலம் வலிது, அதுகொல், சாலப்பகை, நிலங் கடந்தான், நிலத்தைக் கடந்தான், நிலங்கடந்த நெடுமால் என்றற்ருெடக்கத்தன தொடர்மொழி , எட்டு, கொட்டு, தாமரை, வேங்கை, எழுந்திருந்தான், வாரா நின்ருன், உரைத் திட்டான் என்றற்ருெடக்கத்தன பொதுமொழி. இவை ஒரு மொழிகளாய் ஒருபொருள் தருவதன்றி, எள்ளேத்து, கொள் ளேத் து, தாவுகின்ற மரை, வேகின்ற கை, எழுந்து பின் இருந் தான், வந்து நின்ருன், உரைத்துப் பின் இட்டான் எனத் தொடர்மொழிகளாய்ப் பலபொருள் தருதலும் காண்க . ஈண்டுத் தொடர்மொழி பலபொருளன என்றது. பல சொல்லிற் பல பொருளேயென அறிக. சேன, படை முதலிய ஒரு மொழி கள் யானே தேர் குதிரை, காலாள் ஆகிய பல பொருளே யுணர்த்துமேனும் பலபொருளிட்டமாகிய அவையனைத்தும் இயைந்து ஒன்ருயுள்ள நிலையில் ஒருபொருளெனவே கருதப் படும் என்பது,