பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 ஒப்பி கிைய பெயர்நிலை யுளப்பட அப்பா லொன்பது மவற்ருே ரன்ன. இஃதும் ஒருசார் அஃறிணைப் பெயர்களைக் கூறுகின்றது. (இ-ள்) பல்ல என்பது முதலாகச் சொல்லப்பட்ட ஒன்பது பெயர்களும் மேற்கூறிய அஃறிணைப் ப்ெயர் போலப் பாலுணர நிற்கும். எ-று. பல்ல, பல, சில, உள்ள, இல்ல என்னும் ஐந்து பெயரும் தம்மை யுணர்த்தி நின்றன. அல்லன பொருளுணர்த்தி நின்றன. வினைப் பெயர்க் கிளவியாவன வருவது, செல்வது, வருவன, செல்வன என வினைபற்றி வருவன. பண்புகொள் பெயராவன கரியது கரியன எனப் பண்புபற்றி வருவன. இனத் தெனக் கிளக்கும் எண்ணுக் குறிப்பெயராவன, ஒன்று, பத்து, நூறு என எண்பற்றி எண்ணப்படும் பொருள்மேல் நிற்பன. ஒப்பிளுகிய பெயர்நிலையாவன, பொன்னன்னது, பொன்னன் னவை என ஒப்புப்பற்றி வருவன. இவை முன்னையவைபோல வழக்கின்கண் பயின்று வாாாமையிற் பிற்கூறப்பட்டன. ளசுக.ை கள்ளொடு சிவனு மவ்வியற் பெயரே கொள்வழி யுடைய பலவறி சொற்கே. இஃது, அஃறிணையியற் பெயராமாறு கூறுகின்றது. (இ-ள்) கள் என்னும் விகுதியொடு பொருந்தும் அஃறிணை இயற்பெயர் கள்ளிற்ருேடு பொருந்துதற்கண் பலவறி சொல்லா தற்குக் கொள்ளும் இடம் உடைய, எ-று. அஃறிணையியற் பெயராவன, ஆ, நாய், குதிரை, கழுதை, தெங்கு, பலா, மலே, கடல் என்னுந் தொடக்கத்து இனப் பெயர்கள். சாதிப் பெயராகிய இவை அவ்வப் பொருளுக்குரிய இயற்பெயராய் ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்ற லின் அஃறிணையியற் பெயர் எனப்பட்டன. அஃறிணை யிரு *3