பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பாற்கும் பொதுவாகிய இவை கள் என்னும் விகுதிபெற்று, ஆக்கள் குதிரைகள் என நின்ற வழிப் பன்மை விளக்கலிற் பலவறி சொல்லாயின. ள எம். அன்ன பிறவு மஃறிணை மருங்கிற் பன்மையு மொருமையும் பாலறி வந்த என்ன பெயரு மத்திணை யவ்வே. இஃது அஃறிணைப் பெயர்க்குப் புறனடை கூறுகின்றது. (இ-ஸ்) மேற்கூறப்பட்ட பெயர் போல்வன பிறவும் அஃ றினக்கண் பன்மையும் ஒருமையும் ஆகிய பால் விளங்க வந்தஎல்லாப் பெயரும் அத்திணைக்குரிய. எ-று. அன்னபிறவும் என்ற தல்ை, பிறிது, பிற , மற்றையது, மற்றையன, பல்லவை, சில்லவை, உள்ளது, இல்லது, உள் ளன, இல்லன, அன்னது, அன்னன என்பன கொள்ளப்படும். தொல்காப்பியனுர் மேற்குறித்த நான்கு சூத்திரங்களால் பாலறிய வந்த அஃறிணைப் பெயர்களாகத் தொகுத்துக் கூறிய வற்றைப் பவணந்தியார் ஒன்றன்பாற் பெயர், பலவின்பாற் பெயர் என இருவயைாகப் பகுத்து இரண்டு சூத்திரங்களால் உணர்த்துவர். 278. விச்ைசுட் டுடனும் வேறு மாம்பொரு ளாதி யுறுதுச் சுட்டனே யாய்தம் ஒன்றெனெண் ணின்னன வொன்றன் பெயரே. எனவரும் நன்னூற் குத்திரம் அஃறிணையொருமைப் பெய ராவன இவையென உணர்த்துவதாகும். எ வினவின் கண்ணும் சுட்டின் கண்ணும் கலந்து உடகிை யும் வினவவும் சுட்டவும் படாது அவற்றிற்கு வேருகியும் வரும் பொருள் முதல் ஆறினையும் பொருந்திய துவ்விகுதியீற்றுப் பெயரும், சுட்டோடு கூடிய ஆய்தத்தைப் பொருந்திய துவ்விகுதியீற்றுப் பெயரும், ஒன்று என்னும் எண்ணுகுபெயரும்