பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 இவை போல்வன பிறவும் அஃறிணையொன்றன்பாற் பெயராம்: என்பது இதன் பொருள். இன்னன என்றமையால், பிறிது, மற்றையது என்றற் ருெடக்கத்து அஃறிணையொருமைப் பொருள் குறித்து வருவன எல்லாம் கொள்ளப்படும். 279. முன்ன ரவ்வொடு வருவை யவ்வும் சுட்டிறு வவ்வுங் கள்ளிறு மொழியும் ஒன்ற லெண்ணும் உள்ள வில் ல பல்ல சில்ல வுளவில பலசில இன்னவும் பலவின் பெயரா கும்மே. எனவரும் நன்னூற் சூத்திரம், அஃறிணைப் பன்மைப் பெயராவன இவையென உணர்த்துவதாகும். முன்னர்க் கூறிய விச்ை சுட்டுடனும் வேறுமாம் பொரு ளாதி ஆறைேடும் ஏற்ற பெற்றி இயைந்துவரும் வகர ஜகார வீற்றுப் பெயர்களும், அகர வீற்றுப் பெயர்களும், வகரவொற் lற்றுச் சுட்டுப் பெயர்களும், கள் என்னும் பகுதிப்பொருள் விகுதியை இறுதியாகவுடைய பெயர்களும், ஒன்று அல்லாத இரண்டு முதலிய எண்ணுகு பெயர்களும், உள்ள, இல்ல, பல்ல, சில்ல, உள, இல, பல, சில என எடுத்தோதப்பட்ட குறிப்பு வினையாலணேயும் பெயர்களும், இவை போல்வன பிற வும் அஃறிணைப் பன்மைப் பெயர்களாம்?? என்பது இதன் பொருள். உண்மை, இன்மை முதலிய பண்பினை யடிப்படையாகக் கொண்டுவரும் அகரவீற்றுப் பெயர்கள் முன்னரவ்வொடு வருவை அவ்வும் என்பவற்றுள் அடங்குதலால், உள்ள என் பது முதலாகச் சூத்திரத்துள் எடுத்தோதப்பட்ட எட்டுப் பெயர் களும் குறிப்பு வினையாலணையும் பெயர்கள் எனக் கொள்வர் சிவஞானமுனிவர். இன்னவும் என்றமையால், யா, பிற, மற்றைய என்றற் ருெடக்கத்து அஃறிணைப் பன்மைப்பொருள் குறித்து வருவன வெல்லாம் கொள்ளப்படும்.