பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 என்க. தெரிநிலை யுடைய வஃறிணை யியற்பெயர் ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே. இது, பால் விளங்காத அஃறிணை யியற்பெயர் பாலுணர்த்து மாறு கூறுகின்றது. (இ.ஸ்) கள்ளொடு சிவதை அஃறிணை யியற்பெயர் ஏற்ற விஜனயொடு தொடர்ந்தவழி ஒருமையும் பன்மையும் விளங்கு நிலையுடையன. எ-று.

  • கள்ளொடு சிவனும் என முற்கூறிய அடைமொழியின்றி, அஃறிணையியற்பெயர் எனக் கூறவே, கள்ளொடு சிவனத அஃறிணையியற்பெயர் என்பது புலம்ை. அஃறிணையியற்பெயர் விஜனயொடுவரின் ஒருமையும் பன்மையும் தெரிநிலேயுடைய என இயையும். தெரிநிலை - தெரியும் நிலை; பால்விளங்கும் நிலை.

(உ-ம்:) ஆ வந்தது, ஆ வந்தன; யானே வந்தது, யானை வந்தன; மரம் வளர்ந்தது, மரம் வளர்ந்தன. என ஏற்ற வினையால் ஒருமையும் பன்மையும் விளங்கிய வாறு கண்டுகொள்க. வி&னயொடுவரின் என்ருராயினும் ஆ ஒன்று, ஆ பல என முடிக்குஞ் சொல்லாகிய பெயராற் பாலறியப் படுதலும் கொள்க. இவ்வாறு ஒருமையும் பன்மையும் பகுத்துரைத்தற்கியலாத வாறு அமைந்த அஃறிணையியற்பெயர்கள் ஒருமை வினையும் பன்மை வினையும் கொண்டு முடிதற்கேற்றவாறு அஃறிணையிரு பாற்கும் பொதுவாய் நிற்றலே, 280. பால்பகா அஃறிணைப்பெயர்கள் பாற்பொதுமைய. எனவரும் சூத்திரத்தால் உணர்த்துவர் நன்னூலார். அஃறிணைப் பெயர்களுள் மேற் பால்பகுத்துரைத்தவை யொழித்து ஒழிந்த இயற்பெயர்களனைத்தும் ஒருமை பன்மை கட்குப் பொதுவாய் நிற்பனவாம்?’ என்பது இதன்பொருள்.