பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 ள எஉ. இருதிணேச் சொற்கும் ஒரன்ன வுரிமையிற் றிரிபுவேறு படுஉம் எல்லாப் பெயரும் நினேயுங் காலேத் தத்த மரபின் வினையோ டல்லது பாறெரி பிலவே. இது, நிறுத்த முறையானே விரவுப்பெயராமாறு கூறுகின்றது. (இ-ள்) இருதினைச் சொல்லாதற்கும் ஒத்த உரிமைய வாதலின் உயர்திணைக்கட் சென்றுழி உயர்திணைப் பெயராயும் அஃறிணைக்கட் சென்றுழி அஃறிணைப் பெயராயும் திரிந்து வேறு படும் விரவுப் பெயரெல்லாம், ஆராயுங்காலத்து அவ்வத் திணையை யுணர்த்துதற்குரிய முறைமையினையுடைய வினைச் சொல்லோடு இயைந்தல்லது திணை விளங்க நில்லா. எ-று. தத்தமரபின் வினையாவன, உயர்திணைக்கும் அஃறிணைக்கு முரிய பதினேரீற்றுப் படர்க்கைவினை. (உ-ம்) சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது; சாத்தி வந்தாள், சாத்தி வந்தது - எனவரும். சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல் என்பதல்ை வினையோடல்லது பால் தெரியில் என்ருரேனும் சாத்தன் ஒருவன், சாத்தன் ஒன்று எனத் தத்தமரபிற் பெயரொடு வந்து பால் விளக்கலுங் கொள்க. இரு திணைக்கும் பொதுவாகிய சொல் வினையாற்பொதுமை நீங்கி ஒரு திணைச் சொல்லாம் என்பது கருத்தாகலின், ஈண்டுப் பால் என்றது திணையினை. ள எங். நிகழுஉ நின்ற பலர் வரை கிளவியின் உயர்திணை யொருமை தோன்றலு முரித்தே அன்ன மரபின் வினேவயி னுன. இது, விரவுப்பெயர் தத்தமரபின் வினேயல்லாத விரவு வினையாலும் திணையறியப்படும் என்கின்றது.