பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பொருண்மையைச் சுட்டிய சினைமுதற் பெயரும் பன்மைப் பொருண்மையைச் சுட்டிய சினமுதற் பெயரும் ஒருமைப் பொருண்மையைச் சுட்டிய சினைமுதற் பெயரும் என அந்நான் காம் என்பர் ஆசிரியர். எ-று. (உ-ம்) முடக்கொற்றி, முடக்கொற்றன், பெருங்கால் யானே, கொடும்புறமருதி எனவரும். ள எசு. பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயரென் ருயிரண் டென்ப முறைப்பெயர் நிலேயே. இது, முறைப்பெயர் இரண்டும் இவையென உணர்த்துகின்றது. (இ-ள்) பெண்மைப் பொருண்மையைச் சுட்டிய முறைப் பெயரும் ஆண்மைப் பொருண்மையைச் சுட்டிய முறைப் பெயரும் என முறைப்பெயரது நிலேமை இரண்டாகும். எ-று , (உ-ம்) தாய், தந்தை எனவரும். இங்ங்ணம் ஆசிரியர் தொல்காப்பியர்ை ஆறு சூத்திரங்க ளால் தொகுத்தும் வகுத்தும் உணர்த்திய இரு திணைக்கும் உரிய பொதுப் பெயர்களோடு, அவர் கூருத தன்மைப் பெயர்களேயும் முன்னிலையில் அவர் கூருத எல்லீர் நீவிர் நீர் என்பவற்றையும் இருதினேக்கும் உரிய பொதுப் பெயராகக் கொண்டு, 281 முதற்பெயர் நான்குஞ் சினேப்பெயர் நான்கும் சினைமுதற் பெயரொரு நான்கும் முறையிரண்டும் தன்மை நான்கும் முன் னிலே ஐந்தும் எல்லாம் தாம்தான் இன்னன பொதுப்பெயர். எனவும், 28.2. ஆண்மை பெண்மை ஒருமை பன்மையின் ஆமந் நான்மைகள்; ஆண்பெண் முறைப்பெயர். எனவும் வரும் இரண்டு சூத்திரங்களால் தொகுத்தும் வகுத்தும் உணர்த்தினர் பவணந்தி முனிவர்.