பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 இங்கு முதற்பெயர் என்றது இயற்பெயரை. முதற்பெயர் நான்கும், சினப்பெயர் நான்கும், சினே முதற்பெயர் நான்கும், முறைப்பெயர் இரண்டும், யான், நான், யாம், நாம் என்னும் தன்மைப் பெயர் நான்கும், எல்லீர், நீயிர், நீவிர், நீர், நீ என்னும் முன்னிலைப் பெயர் ஐந்தும் , எல்லாம், தாம், தான் எனவரும் ஒன்பதுவகைப் பெயர்களும் இருதிணைக்கும் பொதுவான பெயர்களாகும். இவற்றுள் முதற் பெயர், சினேப்பெயர், சினே முதற்பெயர் என்பன ஆண்மை, பெண்மை, ஒருமை, பன்மை காரணமாக ஒவ்வொன்றும் நந்நான்காகும். முறைப்பெயர் ஆண் பெண் என இரண் டாகும்.’’ என்பது இந் நன்னூற் சூத்திரங்களின் பொருளாகும். ள அம். பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலேயே. இது, பெண்மை சுட்டிய பெயர் இருதிணேக்கண்ணும் தனக் குரிய பாலுணர்த்துமாறு கூறுகின்றது. (இ ள்) பெண்மை சுட்டிவரும் நான்கு பெயரும் அஃறி ணைப் பெண்ணுகிய ஒன்றற்கும் உயர்திணை ஒருத்திக்கும் ஒத்த நிலே மைய. எ-று. (உ-ம்) சாத்தி வந்தது, சாத்தி வந்தாள் எனவும், முடத்தி வந்தது, முடத்தி வந்தாள் எனவும், முடக்கொற்றி வந்தது, முடக்கொற்றி வந்தாள் எனவும் தாய் வந்தது, தாய் வந்தாள் எனவும் முறையே இயற்பெயர், சினேப்பெயர், சினைமுதற்பெயர், முறைப்பெயர் ஆகிய நான்கும் அஃறிணைப் பெண்ணுெருமைக் கும் உயர்திணைப் பெண்மைக்கும் உரியவாய் வந்தவாறு கண்டு கொள்க. ஒன்றற்கும் எனப் பொதுப்படக் கூறினுரேனும் பெண்மை சுட்டிய பெயரென்றமையால் அஃறிணைப் பெண்ணுகிய ஒன் றையே குறிக்கும். இவ்வாறே ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்?’ என அடுத்து வரும் சூத்திரத்தும் ஒன்று என்பது அஃறி.ணயானகிய ஒன்றையே குறிக்குமெனக் கொள்க. ஒன்றிய நிலை-ஒத்த நிலை. ஒன்றிய நிலையுடையவற்றை ஒன்றிய நிலே என்ருர்.