பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 யிலும் தன் தன் பால்களை ஏற்று நிற்றலை விளக்கும் இந் நான்கு சூத்திரப் பொருளையும் தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது, 288. அவற்றுள், ஒன்றே யிருதிணத் தன்பால் ஏற்கும். எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 'முதற்பெயர் முதலாகக் கூறப்படும் இருபத்தாறும் பிறவு மாகிய பொதுப் பெயர்களுள் ஒவ்வொன்றும் இருதிணைக் கண்ணும் தன்தன் பால்களே ஏற்கும்?' என்பது இதன் பொரு ளாகும். எனவே, ஆண்மைப் பொதுப்பெயர் உயர்திணையாண் பாலையும் அஃறிணையாண்மையையும், பெண்மைப் பொதுப் பெயர் உயர்திணைப் பெண்பாலேயும் அஃறிணைப் பெண்மையை யும், ஒருமைப் பொதுப்பெயர் உயர்தினை ஆணுெருமை. பெண் ணுெருமையினையும் அஃறிணை யொருமையினையும், பன்மைப் பொதுப்பெயர் உயர்திணைப் பன்மையினையும் அஃறி&ணப் பன்மையினையும் ஏற்கும் என்பதாயிற்று. ஆண்மைப் பொதுப்பெயர் பெண்மைப் பொதுப்பெயர் முதலிய இப்பெயர்கள் செஞ்ஞாயிறு என்றற்போல இனமில் லாத அடைமொழியன்றிச் செந்தாமரை என்ருற்போல இன முள்ள அடைமொழியாற் கூறப்படுதலின் இவை இருதிணே யிலும் தன் தன் பாலே ஏற்கும் எனச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார் நன்னூலார். ள அச. தாமென் கிளவி பன்மைக் குரித்தே. இது, தத்தமரபின என மேற்கூறப்பட்ட விரவுப்பெயர் பாலு ணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்) தாம் என்னும் பெயர் இருதியிைலும் பன்மைப் பாற்கு உரித்து. எ-று. - (உ-ம்.) தாம் வந்தார்; தாம் வந்தன எனவரும்.