பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 ஆக்கமில்லை? எனவே சிறுபான்மை வரப்பெறும் என்ருர் இளம்பூரணர். ஆக்கம்-பெருக்கம்; பெரும்பான்மை. பெரும் பான்மை யில்லே யெனவே சிறுபான்மை வரப்பெறும் என்ப தாயிற்று. ள அ.அ. நீயிர் நீயென வரூஉங் கிளவி பாறெரி பிலவே யுடன்மொழிப் பொருள. இது, விரவுப்பெயர் சிலவற்றிற்குரியதோர் இலக்கணங் கூறு கின்றது. (இ.ஸ்) நீயிர், நீ என்னும் இரண்டு பெயர்ச்சொல்லும் திணைப்பகுதி தெரிய நில்லா; இருதினேயும் உடன்தோன்றும் பொருளன. எ-று. பாலின்றித் திணையை மட்டும் உணர்த்துவதோர் சொல்லின் மையின் பால் எனவே திணையும் அடங்கும். உடன்மொழிப் பொருள என்றது, இருதிணைப் பொருளும் ஒருங்குவரத் தோன் றும்; பிரித்து ஒருதிணை விளக்கா என்றவாறு, (உ-ம்) நீயிர் வந்தீர்; நீ வந்தாய் என இருதிணைக்கும் பொதுவாய் நின்றவாறு கண்டுகொள்க. இருதிணைக்குமுரிய பொதுப் பெயரெல்லாம் தத்தம் மரபின் வினையொடுவந்து பிரித்து ஒரு திணையை விளக்குதல் போன்று இம்முன்னிலைப் பெயர்களும் ஒருதிணையைப் பிரித்துணர்த்து தற்குரிய வினையினைப் பெருமையின் பால்தெரியிலவே உடன் மொழிப் பொருள! என்ருர். ள அக.ை அவற்றுள், நீயென் கிளவி யொருமைக் குரித்தே. இது, நீ என்பது பாலுணர்த்துமாறு கூறுகின்றது. (இ.ஸ்) முற்கூறிய இரண்டு பெயருள் நீ யென்னும் பெயர் இருதினக்கண்ணும் ஒருமை விளக்குதற்குரித்து. எ.று. ஒருமையாவது, ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும் பால் களுக்குப் பொதுவாகிய ஒருமை என்னும் எண்.