பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பிறவு முளவே யக்கிளேப் பிறப்பே என மீண்டும் எடுத்தோதி யுள்ளமையானும் மக்களொடு சேர்த்துத் தேவர் தானவர் முதலியோரையும் உயர்திணைவகையுட் சார்த்திக் கூறும் பிற் கால வழக்கிற்கு ஆசிரியர் தொல்காப்பியனர் இடந்தந்துள்ளமை இங்கு நினைத்தற்குரியதாகும். மரம் நாடொறும் உயர்ந்தமை கருதி உயர்மரம் என வழங்குமாறு போன்றும் கல்வியறிவு நாடொறும் உயர்ந்தமை கருதி அதனையுடையார் மேலேற்றி உயர்மக்கள் என வழங்கு மாறு போன்றும் ஒழுக்கத்தால் நாளும் உயரும் புடை பெயர்ச்சி கருதி அவ்வுயர்ச்சியுடைய மக்கட்டொகுதியை உயர்திணை எனக் கூறினராதலின், உயர்திணை என்பது வினைத்தொகை என இளம்பூரணர் முதலிய பண்டையுரையாசிரியர் கூறியது. மிகவும் பொருத்தமுடையதாதல் காணலாம். உ. ஆடுஉ வறிசொல் மகடூஉ வறிசொல் பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி அம்முப் பாற்சொல் உயர் திணை யவ்வே. இஃது உயர்திணையுட் பால்வகையினை யுணர்த்துகின்றது. (இ-ள்) ஆண்மகனே யறியும் சொல்லும் பெண்மகளையறியுஞ் சொல்லும் பல்லோரையறியுஞ் சொல்லொடு பொருந்தி அம் மூன்று கூற்றுச் சொல்லும் உயர்திணையிடத்தனவாம். எ-று. ஆடுஉ-ஆண்மகன். மகடூஉ-பெண்மகள் . ஆடவர் என்றற் ருெடக்கத்து ஆண்பன்மையும் பெண்டிர் என்றற்ருெடக்கத்துப் பெண்பன்மையும் மக்கள் என்றற்ருெடக்கத்து இருவர் பன்மை யும் அடங்கப் பல்லோரறியுஞ் சொல் என்ருர். அறிசொல்அறிதற்குக் கருவியாகிய சொல். சிவனுதல்-பொருந்துதல். சிவணி என்னும் செய்தென் எச்சம் உயர்திணைய என்னும் வினேக்குறிப்புக் கொண்டு முடிந்தது. உயர்தினைச் சொற்கள் முப்பால்களாகப் பகுத்துரைக்கப் படும் என்பதனே,