பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 (உ-ம்) தான் வந்தான், யான் வந்தேன், நான் வந்தேன், நீ வந்தாய் எனவும், தாம் வந்தார், யாம் வந்தேம், நாம் வுந்தேம், யாமெல்லாம் வந்தேம், எல்லீரும் வந்தீர், நீயிர் வந்தீர், நீர் வந்தீர், நீவிர் வந்தீர் எனவும் இருதிணைக் கண்ணும் முறையே ஒருமையும் பன்மையும் உணர்த்திவந்தமை காண்க. ளகக. ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கு முரித்தே தெரியுங் காலே. இஃது உயர்திணப் பொருட்கண் வரும் விரவுப் பெயரொன்றற்கு இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்) ஒருவர் என்னும் பெயர்ச்சொல் ஒருவன் ஒருத்தி யென்னும் இருபாற்கும் பொதுவாய் நிற்கும். (உ-ம்) ஒருவர் வந்தார் என்புழி ஒருவர் என்பது ஆண் பாற்கும் பெண்பாற்கும் பொதுவாய் நின்றவாறு கண்டுகொள்க. உயர்திணைக்கண் ஒருமைப்பால் இரண்டேயாதலின் இரு பாற்கும் என முற்றும்மை கொடுத்தார். ளகஉை. தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும். இது, மேலதற்கோர் முடிபுணர்த்துகின்றது. (இ-ள்) ஒருவர் என்னும் பெயரது இயல்பு கருதின், அஃது ஒருமைப்பெயராயினும் பல்லோரறியுஞ் சொல்லொடு தொடர்தற்கு ஏற்கும். எ-று. ஈண்டுத் தன்மை என்றது. பாலு ணர்த்துமீருகிய சொல்லின் தன்மையினே. (உ-ம்.) ஒருவர் வந்தார்; ஒருவர் அவர் எனவரும். இவ்விரு சூத்திரப் பொருள்களையும் தழுவியமைந்தது, 238. ஒருவ ரென்ப துயரிரு பாற்ருய்ப் பன்மை வினைகொளும் பாங்கிற் றென்ப. எனவரும் நன்னூற் சூத்திரமாகும்.