பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 இவ்வாறு, இருதிணைக்கண்ணும் ஆண்பால், பெண்பால் களேக் குறித்துப் பொதுவாக வழங்கும் பெயர்ச்சொற்களும் வினைச் சொற்களும் தம் பொதுமை நீங்கிக் குறிப்பில்ை ஒன்றன விலக்கி ஒன்றற்குரியவாய் வருதல், 351. இருதினே யாண் பெணு ளொன்றனே யொழிக்கும் பெயரும் வினையுங் குறிப்பி ேைன. எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிடுவர் நன்னூலார். உயர்திணை ஆண்பால் பெண்பால் என்னும் இருபாற்கும் பொதுவான பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் அவ்விரு பாலுள் ஒருபாலயொழித்து ஒருபாலேக் குறிப்பில்ை உணர்த்தும் என்பது இதன் பொருளாகும். (உ-ம்). வடுகரரசர் ஆயிரவர் மக்களையுடையார் எனவும், இச்சோலையுள் நால்வர் விளையாடினர் எனவும், இவ்வூர்ப் பெற்றமெல்லாம் உழவொழிந்தன எனவும், இப்பெற்றமெல்லாம் அறத்திற்கே கறக்கும் எனவும் இருதினைப் பெயரும் வினையும் குறிப்பிற்ை பாலுணர்த்தியவாறறிக. ளகசை. மகடூஉ மருங்கிற் பாறிரி கிளவி மகடூஉ வியற்கை தொழில் வயி னன. இஃது உயர்திணைப் பெண்பாற் பெயரொன்றற்கு உரியதோர் இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) மகடூஉப் பொருண்மைக்கண் பால்திரிந்து வரும் பெண்மகன் என்னும் பெயர், வினைகொள்ளுமிடத்துப் பெண் பாற்குரிய வினைகொண்டு முடியும். எ-று. (உ-ம்) பெண்மகன் வந்தாள் எனவரும். பாலுணர்த்தற் சிறப்புப்பற்றித் தொழில் வயினை என்ருரேனும் முடிக் குஞ் சொல்லாகப் பெயர் கொள்ளுமிடத்தும் பெண்மகன் அவள் எனப் பெண்பாற் பெயரே கொள்ளும் என்பதாம்.