பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221 பெண்மகன் என்னும் இப்பெயர் தானுணர்த்தும் பொருண்மை பற்றிப் பெண்பால்வினை கொண்டு முடியுமோ னகர வீருகிய சொன்மை பற்றி ஆண்பால்வினை கொண்டு முயுமோ என்று ஐயுற்றர்க்கு ஐயம் அகற்றியவாறு. ள கூடு. ஆவோ வாகும் பெயருமா ருளவே ஆயிட னறிதல் செய்யு ளுள்ளே. இது பெயரீறு செய்யுளுள் திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்) ஆகாரம் ஓகாரமாய்த் திரியும் பெயர்களும் உள் ளன. அவை செய்யுளுள் திரியுமிடம் அறிக. எ-று. (உ-ம்) வில்லோன் காலன கழலே; தொடியோள் மெல்லடி மேலவுஞ் சிலம்பே; நல்லோர் யார்கொல் அளியர் தாமே வேய்பயி லழுவ முன்னி யோரே?? (குறுந் - எனவும், விகழனி நல்லூர் மகிழ்நர்க் கென் இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே: எனவும் வில்லான், தொடியாள், நல்லார், முன்னியார், செப்பாதாய் எனவரும் சொற்களில் ஆன், ஆள், ஆர், ஆய் எனவரும் விகுதிகளிலுள்ள ஆகாரம் செய்யுளில் ஒகாரமாய்த் திரிந்தவாறு கண்டுகொள்க. சேரமான், மலேயமான், என்னும் பெயர்களின் ஈற்றிலுள்ள விகுதியின் ஆகாரம் இவ்வாறு திரியாமையின் ஆயிடன் அறிதல் என்ருர். ஆவோ வாகும் பெயரும் என்னும் எச்ச வும்மையால் அகரம் ஒகாரமாகத் திரியும் பெயரும் உள எனக் கூறிக் 'கிழவன் கிழவள் என்பன நாடு கிழவோன், கிழவோடேத்து எனவும் வரும் என உதாரணங்காட்டுவர் தெய்வச் சிலையார். இவ்வாறு பெயர் வினைகளின் ஈற்றில் நின்ற ஆன், ஆள், ஆர், ஆய் என்னும் விகுதிகளின் சற்றயல் ஆகாரம் செய்யுளில் ஒகாரமாகத் திரியவும்பெறும் என்பதனை,