பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 352. பெயர்வினை யிடத்து னளரய வீற்றயல் ஆவோ வாகலுஞ் செய்யுளுளுரித்தே, எனவரும் சூத்திரத்தால் உணர்த்தினர் நன்னூலார். ளகசு. இறைச்சிப் பொருள்வயிற் செய்யுளுட் கிளக்கும் இயற்பெயர்க் கிளவி யுயர்திணை சுட்டா நிலத்துவழி மருங்கிற் ருேன்ற லான. இஃது ஒருசார் இயற்பெயர்க் குரியதோர் மரபுணர்த்துகின்றது. எய்தியது விலக்கியதுமாம். (இ-ள்) செய்யுளுட் கருப்பொருள் மேற் கிளக்கப்படும் இருதிணைக்குமுரிய இயற்பெயர் உயர்திணையுணர்த்தா; அவ் வந் நிலத்துவழி அஃறிணைப் பொருளவாய் வழங்கப்பட்டு வருதலால். எ-று. இறைச்சிப் பொருள் என்பது செய்யுளிற் கூறப்படும் அக ஆனந்திணக்குரிய மாவும் புள்ளு முதலாகிய கருப்பொருள். இயற்பெயர்க் கிளவி என்றது, அக்கருப் பொருள்களைக் குறித்து இடுகுறியாகி வழங்கும்பெயரை. நிலமாவன முல்லே குறிஞ்சி மருதம் நெய்தல் என்பன. இயற்பெயர் என்பதனை இருதினேக் கும் பொதுவென ஓதினராயினும் செய்யுளகத்துக் கருப்பொரு ளாகி முல்லை முதலிய நிலத்துவழித் தொன்றும் மாவும் புள்ளும் மரமும் முதலாயினவற்றின்மேல் இடுகுறியாகிவரும் இயற்பெயர் அஃறிணைப் பொருளேச் சுட்டுவதல்லது உயர் தினப் பொருண்மையைச் சுட்டமாட்டா என எய்தியது விலக் கியவாறு. (உ-ம்) கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு வதுவை யயர்ந்த வன்பறழ்க் குமரி?? என்புழி, கடுவன், மூலன், குமரி எனவரும் விரவுப்பெயராகிய இயற்பெயர்கள் அஃறிணைப் பொருளவாயல்லது அந்நிலத்து வழி வழங்காமையின் அவை உயர்தினே சுட்டாமை கண்டு கொள்க. கடுவன், மூலன் என்னும் பெயர்களில் ஆண்பாலு னர்த்தும் அன்னிறும் குமரி என்பதில் பெண்பாலுணர்த்தும்