பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 தெய்வச் சிலையாரும் பகுத்து உரை வரைந்துள்ளார்கள். எச்ச வியலிலுள்ள இறப்பின் நிகழ்வின்: 'எவ்வயின்வினையும்,: அவைதாம், தத்தங்கிளவி, எனவரும் மூன்று சூத்திரங் களையும் வினையிலக்கணமாதலொப்புமை பற்றி இவ்வியலின் இறுதியில் தெய்வச்சிலேயார் சேர்த்துரைத்தமையால் அவர் கருத்துப்படி இவ்வியலின் சூத்திரங்கள் 54.ஆயின. வினைச் சொற்கள் எல்லாவற்றையும் உயர்திணக்குரியன, அஃறிணைக் குரியன, இருதிணைக்குமுரியன என மூன்று வகையாகத் தொல்காப்பியர் இவ்வியலிற் பகுத்துணர்த்துகின்ருர், ளகஅை. வினேயெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலேக் காலமெர்டு தோன்றும். இது, வினைச் சொற்கெல்லாம் பொதுவிலக்கணம் உணர்த்து கின்றது. (இ-ள்) வினையென்று சொல்லப்படுவது வேற்றுமையொடு பொருந்தாது ஆராயுங்காற் காலத்தொடு புலப்படும். எ-று. இங்கு வேற்றுமை என்றது, வேற்றுமையுருபின. (உ-ம்) உண்டான், கரியன் என வேற்றுமை கொளாது காலமொடு தோன்றியவாறு கண்டு கொள்க. வேற்றுமை கொள்ளாது என்னது காலமொடு தோன்றும்: என்பதே கூறின், வினையாலணையும் பெயரும் தொழிற்பெயரும் வினைச் சொல் எனக் கொள்ளநேரும். காலமொடு தோன்றும் ? என்னது வேற்றுமைகொள்ளாது: என்றுமட்டும் கூறின், இடைச்சொல்லும் உரிச்சொல்லும் விஜனச்சொல் எனக் கொள்ள வேண்டி வரும். ஆதலால் இவ்விருதிறமும் நீக்குதற்கு வேற். றுமை கொளாது காலமொடு தோன்றும் என்ருர், வினைச் சொல்லுள் வெளிப்படக் காலம் விளக்காதனவும் உள. அவை யும் ஆராயுங்கால் கால முடையன என்றற்கு நினையுங்காலே என்ருர். இவ்வாறு பின்னுணர்த்தப்படும் வினைச்சொற்கெல் லாம் பொதுவிலக்கணம் உணர்த்தினர் என்பர் சேவைரையர். வினையென்றது, உண், தின், கரு, செய் எனவரும் முத னிலையை எனவும், இஃது ஆகுபெயராய்த் தன்ற்ை பிறக்கின்ற