பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 சொல்லேயுணர்த்திற்று எனவும், உண்டல், தின்றல், கருமை, செம்மை என்பன அம்முதனிலையாற் பிறந்த வினேப்பெயர் எனவும், உண்டான், தின்ருன், கரியன், செய்யன் என்பன அம்முதனிலேயிற் பிறந்த விஜனச்சொல் எனவும் கூறுவர் நச்சினர்க்கினியர். விஜன என்பது தொழில் உணர்த்தும் சொல்லாதலின் அது வேற்றுமை கொண்டு நிற்பதும் ஒருநிலை உண்டு. அந் நிலையொழியக் காலத்தோடு பொருந்தி நிற்குமது நம்மால் வினைச்சொல் என வேண்டப்பட்டது என்பது இச்சூத்திரத் தின் கருத்தாக விளக்குவர் தெய்வச்சிலேயார். இங்ங்னம் வேற்றுமை கொள்ளாமையும் காலமொடு தோன் றுதலும் வினைச்சொற்கே யிலக்கணமாதலே நன்னூலார் தொழிலல காலந்தோற்ரு, வேற்றுமைக் கிடய்ை ( நன் னுரல் - 274 ) எனப் பெயரிலக்கணம் உணர்த்தும்வழி எதிர்மறை முகத்தால் உணரக் கூறியுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும். வினைச் சொல்லாவது இதுவெனவுணர்த்துவது, 319. செய்பவன் கருவி நிலஞ்செயல் காலஞ் செய்பொரு ளாறுந் தருவது வினையே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். கருத்தாவும் கருவியும் நிலனும் தொழிலும் காலமும் செயப்படுபொருளும் என்னும் ஆறுபொருளையும் தருவது வினை ச் சொல்லாகும் ?? என்பது இதன் பொருள், வினே என்றது, ஆகுபெயராய் வினைச்சொல்லேயுணர்த் திற்று செய்பவன் - கருத்தா; ஒருபர்ல்மேல் வைத்தோதி ேைரனும் ஐம்பாலும் கொள்க. இயற்றுதற்கருத்தா, ஏவுதற் கருத்தா என்னும் இரண்டனையும் செய்பவன் என்றும், முதற் காரணம், துணைக் காரணம் என்னும் இரண்டனையும் கரு வி என்றும் பொதுப்படக் கூறினர்.